Header Ads



அவசியமற்ற செலவுகள் என எண்ணும் சகல பொருட்களையும் 3 மாதங்களுக்கு இறக்குமதி செய்ய தடை

மோட்டார் வாகனங்கள், ஆடம்பர பொருட்கள், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு இறக்குமதி செய்ய தடைவிதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், ஆடம்பர பொருட்கள், தேசிய ரீதியாக உற்பத்தி செய்யக் கூடிய காய்கறிகள், பழங்கள் போன்றவை மாத்திரமல்லாது அவசியமற்ற செலவுகள் என எண்ணும் அனைத்து பொருட்களையும் மூன்று மாதங்களுக்கு இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிகளை குறைப்பதன் மூலம் நாட்டில் இருந்து வெளியில் செல்லும் பணத்தை குறைக்க முடியும் என்பதுடன் நாட்டிற்குள் பணம் வருவதை இதன் மூலம் அறிக்க முடியும் எனவும் ரூபாவின் பெறுமதியை தக்கவைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் 78 பக்கங்களை கொண்டது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை நாட்டின் சிறிய மற்றும் மத்திய உற்பத்தி தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை தொடர்ந்தும் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. NOT FOR ONLY THREE MONTHS. PLEASE BAN UNNECESSARY IMPORTS TILL THE ECONOMY RECOVERS.

    ReplyDelete

Powered by Blogger.