Header Ads



கட்டுப்பாடுகளை தளர்த்தினால் - 2 ஆம் சுற்று வைரஸ் ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சமூக விலக்கல் நடவடிக்கைகளை தளர்த்தினால் இரண்டாவது சுற்று கொரோனா ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் பின்பற்றப்பட்ட கடுமையான சமூகவிலக்கல் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள ஹொங்கொங் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கட்டு;ப்பாடுகள் நீக்கப்படும்போது இரண்டாவது சுற்று கொரோனா ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.

சீனா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுத்துள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் இரண்டாம் சுற்று கொரோனா ஆபத்துள்ளது என குறிப்பிட்டள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது சீனாவில் மாத்திரமல்ல பிரிட்டன் உட்பட ஏனைய உலக நாடுகளிலும் சாத்தியம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கொரோனா வைரசினை மிக்குறைந்தளவிற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக தோன்றுகின்ற அதேவேளை தொற்றுநோய்க்கு எதிரான மறைமுக பாதுகாப்புகள் இல்லாத பட்சத்தில் வைரஸ் தாக்கம் மீண்டும் நிகழக்கூடும் என இந்த ஆய்வினை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய ஹொங்கொங் பல்கலைகழக பேராசிரியர் ஜோசப் டி வு தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் பாடசாலைகள் மெல்ல மெல்ல மீண்டும் ஆரம்பிக்க தொடங்கியவுடன்,மக்கள் ஒருவருடன் ஒருவர் பழகத்தொடங்கியவுடன் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் நோய் பரவலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி அமெரிக்க ஈரான் போன்ற நாடுகளில் இருந்து மீண்டும் சீனாவிற்கு வைரஸ் பரவத்தொடங்கினால் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதன் காரணமாகவும்,மக்களிற்கு இடையிலான தொடர்பாடல்கள் காரணமாகவும் வைரஸ்மீண்டும் வேகமாக பரவும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.