Header Ads



அல்ஜஸீரா வெளியிட்ட தகவல் - இலங்கையில் 2 முஸ்லிம்களின் உடல்கள் தகனம்

ஆழ்ந்த கவலையுடன், கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை இலங்கை அரசாங்கம் தகனம் செய்யும்படி வற்புறுத்தியது.

அனைத்துவகையான உரிமைகளுக்கும் குரல்கொடுக்கின்ற அமைப்புகளும் கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. இந்த அரசாங்கத்தின் முடிவானது உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 காரணமாக இறப்பெய்திய முஸ்லிம்களின் பூதவுடலை, இலங்கை அரசாங்கம் வற்புறுத்தி தகனம் செய்த செயலானது, இலங்கை சிறுபான்மை மக்களிடத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்செயலானது உலகமக்கள் அனைவரும் இலங்கையை விநோதக்கண்கொண்டும், அருவருப்பான மனோநிலையுடனும் பார்ப்பதற்கு வழியேற்படுத்தியுள்ளது. இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவ ஆரம்பித்த கோவிட-19 என்ற வைரசானது, உலகலவில் பல ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தியுள்ளது, இதன்காரணமாக இறப்பெய்திய பல நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களையும், அந்தந்த நாடுகள், அவர்களது மார்க்க வழிகாட்டலுக்கு ஏற்ப அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இத்தொற்று ஏற்பட்ட அதிகளவான நாடுகள், கிட்டத்தட்ட 160 நாடுகள் முஸ்லிம்களின் பூதவுடலை நல்லடக்கம் செய்ய அனுமதியளித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இம்முடிவை உலகநாடுகள் அனைத்தும் மிகவும் அதிர்ச்சியோடு உற்றுநோக்குகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தினதும், அதிகமான மருத்துவ மற்றும் ஆராய்ச்சியாளர்களினதும் முடிவின் படி கோவிட-19 என்ற இந்நோயினால் இறந்தவர்களின் பூதவுடலை நல்லடக்கம் செய்யமுடியும் என்ற தெளிவான வழிகாட்டல் இருந்தும், சுமார் 160 நாடுகளில் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த தகனம் செய்ய வேண்டும் என்ற முடிவானது, முற்று முழுதாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் முடிவு என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளார்கள். இது இலங்கை அரசாங்கத்தின் தெளிவான இனவாதத்தை காட்டக்கூடிய, மிகத்தெளிவான நிகழ்வாக இது அமைந்துவிட்டது. இதனை மேலும் தெளிவாக வெளிப்படுத்திய நிகழ்வாக அததெரணவில் நடந்து நேரடி ஒளிபரப்பின் நடுவே நடந்த உரையாடலைக்குறிப்பிடலாம். இவ்வுரையாடல் சமூகவலைத்தளங்களில் அன்மையில் வெளியிடப்பட்டு, அரசாங்கத்தினதும், அதன் சார் நிறுவனங்களினதும், உண்மையான நோக்கத்தை இலங்கை மக்கள் மத்தியில் புலப்பட வைத்தது.

மேற்படி நிகழ்வுகளின் மூலம் எமக்கு விளங்குவது என்னவென்றால், முஸ்லிம்களின் பூதவுடலை தகனம் செய்த நிகழ்வானது, முழுக்க முழுக்க இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது, மாற்றமாக எவ்வித மருத்துவ வழிகாட்டலுக்கும் உட்பட்டதல்ல என்பதை மிகத்தெளிவாக காட்டுகின்றது.

ஒரு சில எமது முட்டாள் முஸ்லிம்களும், மேற்கூறிய அரசாங்கத்தின் இனவாதச் சதியை புரிந்து கொள்ளாமல், இனவாத அரசாங்கம் விரித்த வளையில் தானக சென்று வீழ்வதோடு, கோட்டபாய அரசாங்கத்திடமிருந்து தமக்கான மதிப்பெண்களை பெற்றுக்கொள்ள முயல்கிறார்கள்.

இதுசம்பந்தமான விரிவான செய்தித் தொகுப்பை, அல்ஜஸீரா இணையதளத்திலிருந்து, கீழ்காணும் இணைப்பிணூடாக அறிந்து கொள்ளமுடியும். தயவு செய்து இத்தகவலை அனைவருக்கும் பகிர்வதன் ஊடாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இவ் அநீதியை உலகறியச்செய்வதோடு மீண்டும இது போன்ற அநீதியிலிருந்து எம்மனைவரையும் பாதுகாக்க வல்ல நாயன் அல்லாஹ்விடம் இறைஞ்ஞ{வோம். 

அல்ஜஸீரா இணைப்பு:

2 comments:

  1. அடக்கம் செய்யப்படுவது முஸ்லிம்களின் உடல்கள் மட்டுமல்ல ஏனையவர்களது சடலங்களும் அடக்கம் செய்யப்படுகின்றன...

    ReplyDelete
  2. நாமே சுவருக்கு எறியும் பந்து நமக்கே திரும்பி வரும் நிலைமை மீண்டும் வருவதற்கு அதிக காலம் எடுக்காது.

    ReplyDelete

Powered by Blogger.