Header Ads



தண்டப்பணத்தை செலுத்த, மே 2 வரை சலுகை காலம் - அரசாங்கம் அறிவிப்பு


கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் இடைக்கிடையே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால் இதுவரை செலுத்த முடியாதுள்ள போக்குவரத்து விதிகளை மீறியமைக்கான தண்டப்பணத்தை செலுத்த அரசாங்கம் சலுகை காலத்தை அறிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபரின் ஒப்புதலுடன் எதிர்வரும் மே மாதம் 2 திகதி வரை இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, மார்ச் முதலாம் அல்லது அதற்குப் பின்னர் வழங்கப்படும் அபராத தொகையை எந்தவொரு தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும். 

பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட வாகன தண்டப்பணத்திற்கான கட்டணத்தை செலுத்த மே மாதம் இரண்டாம் திகதி வரை சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது. 

மே மாதம் இரண்டாம் திகதி வரை மட்டுமே சலுகை வழங்கப்படுவதால், சகல தண்டப்பணங்களையும் செலுத்துமாறு தபால் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதன் காரணமாக இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.