Header Ads



மே 28 இல் தேர்தலை நடத்த முயற்சி, பேராசிரியர் ஹூல் கடும் எதிர்ப்பு - ஆணையகத்திற்கு கடிதம்

மே 28 ம் திகதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடலாமா என  இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும் அதனை தான் நிராகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில்  ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்களிற்கு முன்னர் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் 20 ம் திகதி நடைபெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தில் நான் கலந்துகொள்வதை உறுதி செய்வதற்காக தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டார்என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மே மாதம் 28 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவோம் என்ற யோசனையை முன்வைத்தார் என தேர்தல் ஆணையகத்திற்கான கடிதத்தில் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

நான் இதனை நிராகரித்தேன் தேர்தல் ஆணையகத்திற்கான கடிதத்தில் ரட்ணஜீவன்  ஹூல்தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கான திகதியை நிர்ணயிப்பதன் மூலம் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்பது நிச்சயமாகும் வரை நாங்கள் தேர்தலிற்கான திகதியை நிர்ணயிக்க கூடாது என தெரிவித்தே இந்த கடிதத்தை தேர்தல் ஆணையகத்திற்கு  எழுதுவதாக ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

புதிய திகதியை அறிவிப்பது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்.தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்தவுடன் நிலைமை மோசமானதாகும் என ரட்ணஜீவன்  ஹூல்தெரிவித்துள்ளார்.

நாங்கள் மீண்டும் திகதியை மாற்றினால் எங்கள் நம்பிக்கை தன்மை பாதிக்கப்படும் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

ஆறாம் மாதம் இரண்டாம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவேண்டும் என்பதால் அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்கான கால அவகாசம் இல்லாமல் போகலாம் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்

.ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தர ஆறாம் திகதி எங்களிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நாங்கள் தேர்தல் திகதியை அறிவித்த பின்னர் பல சுயேட்;ச்சை   வேட்பாளர்களும்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.28 ம் திகதியை நாங்கள் தேர்தலிற்கான திகதியாக அறிவித்தால் கலாநிதி ஜயசுந்தர அதே கருத்தினை முன்வைப்பார் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்

,நாங்கள் மீண்டும் அதே நெருக்கடிக்குள் சிக்காமலிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என என ரட்ணஜீவன்  ஹூல்தெரிவித்துள்ளார்

முதலில் நாங்கள் எங்கு நிற்கின்றோம் என்ற தெளிவான எண்ணம் அவசியம் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்

தேர்தலை நடத்தினால் பொதுமக்கள் வைரஸ் தொற்றிற்கு உள்ளாவார்கள் என்பது குறித்த  தீவிர கேள்விகள் உள்ளன என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்

யாழ்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி 16 ம் திகதி வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில்  இன்றைய நிலையில் நிலைமை எப்போதும் முன்னேற்றமடையும் அல்லது மோசமடையும் என்பதை எதிர்கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார் என ரட்ணஜீவன்ஹூல்  தெரிவித்துள்ளார்

வாக்களிப்பதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை,  வாக்காளர்களிற்கு உயிருக்கு ஆபத்தை தேர்தல் ஏற்படுத்தக்கூடிய நிலையில் நாங்கள் தேர்தலை நடத்தினால் அது அவர்களின் அடிப்படை உரிமைமைய மீறும் செயல் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் பலர் வாக்களிப்பதை புறக்கணிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக உயிர்வாழ்வதற்கான உரிமையும்அடிப்படை உரிமை என அவர் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. நேர்மையான உங்களை போன்றவர்களால் தான் இன்னமும் இலங்கையில் ஜனநாயகம் வாழ்கிறது!

    ReplyDelete

Powered by Blogger.