Header Ads



நாடு முழுவதும் ஏப்ரல் 27, திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கம்

தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27)  அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது

கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் மற்றும் நோயைத் தடுத்தல் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் விதிமுறைகளை மீறி செய்ற்படுவதை தடுக்கும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள், கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, அம்பாறை மவாட்டத்தின் அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நேற்று (24) இரவு 8.00 மணி அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டமும் திங்கட்கிழமை இவ்வாறு நீக்கப்பட்ட உள்ளது.

இதேவேளை கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் மாவட்டங்களுக்குள் நுழைவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது அனைவருக்கும் முற்று முழுதாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.