Header Ads



கொவிட் 19 ஐ சேர்ந்த மேலும் 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

கொவிட் 19 எனும் உயிர்க்கொல்லி வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஆறு வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த வௌவால்கள் மூலம் இந்தப் புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் இவை, மியன்மாரிலுள்ள 3 வகையான வௌவால்களிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் புதிய வைரஸ்கள், கொவிட் 19 உள்ளடங்கிய SARS-CoV-2 குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை, உலகம் முழுவதும் தற்போது பரவி வருகின்ற கொரோனா வைரஸுடன், மரபணு ரீதியில் தொடர்புபடாதவை என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்கள், விலங்குகள் ஊடாக மனிதர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.