Header Ads



சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 15,000 பேருக்கு சான்றிதழ்கள்


சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 15,000 இற்கும் மேற்பட்டோருக்கு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 15,672 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் 3,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்ததன் பின்னர், அவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.