Header Ads



ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பலி - அதிரும் நாடுகள் - கொரோனா அப்டேட்ஸ்...


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்து 41 ஆயிரத்து 123 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,  உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 479 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 21,816
ஸ்பெயின் - 16,972
இத்தாலி - 19,899
பிரான்ஸ் - 14,393
ஜெர்மனி - 2,961
இங்கிலாந்து - 10,612
சீனா - 3,339
ஈரான் - 4,474
துருக்கி - 1,198
பெல்ஜியம் - 3,600
நெதர்லாந்து - 2,737
சுவிஸ்சர்லாந்து - 1,106
பிரேசில் - 1,114

No comments

Powered by Blogger.