Header Ads



நாட்டுக்கு பெறுமதியான நூல் எழுத, சிறுவர்களுக்கு அழைப்பு - 10,000 நூல்கள் வெளியிடுவதற்கான தேசிய வேலைதிட்டம்


1. தனது நிர்மாண திறமையை வெளிப்படுத்துவதற்கான இது சிறந்த வாய்ப்பாக அமையும்.2.சிறுவர்கள் வாசிப்பதில்லை, எழுதுவதில்லை என்பது தற்போதைய சமூகத்தில் பிரபலமான முறைப்பாடாகும். இருட்டுக்கு சாபமிடுவதனை பார்க்கிலும் விளக்கொன்றை எரிய வைப்பதனை போன்று முறையிடுவதனை பார்க்கிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்ததாகும்.

சமூகத்தின் பிரபலமான குறித்த முறைப்பாட்டை பொய்ப்பிப்பதற்கு சிறுவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.3.அனைத்து சிறுவர்களும் நாட்டுக்கு பெறுமதியானர்களாகும்....அனைத்து சிறுவர்களிடத்திலும் நாட்டுக்கு பெறுமதி வாய்ந்த சிறந்த கதைகள் இருக்கும்...ஆகவே எனது சிறுவர்களிடத்தில் அன்பாக நான் வேண்டிக்கொள்வது ...உங்களிடம் உள்ள நாட்டுக்கு தேவையான கதைகளை ... நாட்டின் பெறுமதியான நூலாக மாற்றுங்கள்..4.நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களும் எமக்கு பெறுமதியானவர்கள் என்ற அடிப்படையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மட்டுப்படாமல் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் குறித்த வாய்ப்பு வழங்க நாம் தீர்மானித்தோம். அத்துடன் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

எனவே எனது அன்பார்ந்த சிறுவர்களே... எழுதுங்கள்..எழுத ஆரம்பியுங்கள்...எக்காரணம் கொண்டும் எழுத பயப்பட வேண்டாம்.. ஏனெனில்..பிழையான பக்கத்தை திருத்திக்கொள்ள முடியும். எனினும் வெற்று பக்கத்தை திருத்த முடியாது..

டலஸ் அழகப்பெரும

கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்இது கல்வி அமைச்சும் இலங்கை தேசிய நூலகமும் ஒன்றிணைந்த செயற்திட்டமாகும்.

No comments

Powered by Blogger.