Header Ads



சமூர்த்தி கொடுப்பனவு தொகை 10 ஆம் திகதிக்கு முன்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா முன்கூட்டிய கொடுப்பனவு தொகையை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கவுள்ளதாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் பந்துல திலகசிறி இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த முன்கூட்டிய கொடுப்பனவு தொகையை இரண்டு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதற்கமைய முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான சமூர்த்தி பயனாளிகள் இதன்மூலம் நன்மை பெறவுள்ளதாகவும் இதற்காக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த தொகைக்காக எந்தவித வட்டியும் அறவிடப்படாது எனவும் பணத்தை மீள் செலுத்துவதற்கான காலம் 18 மாதங்கள் எனவும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.