Header Ads



UNP யின் தீர்மானம் துரதிர்ஷ்டவசமானது, ஜனநாயகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் - இம்தியாஸ்


எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

சட்டத்தரணியின் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிரான ஒன்றென செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.

இது ஒரு துரதிர்ஷ்டவசமான தீர்மானம்.  ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு சிலருடையது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பு கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இப்படியான தீர்மானத்தை எடுத்தமை ஜனநாயகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்.

இந்த தீர்மானம் ஏற்கனவே செயற்குழு மேற்கொண்ட முடிவுக்கு எதிரானது. சஜித் தலைமைதாங்க வேண்டுமென்பது செயற்குழு முன்னரே மேற்கொண்ட தீர்மானம்.

இருந்தபோதும் ஒருசிலர் தற்போது தாங்களாகவே திர்மானம் மேற்கொண்டு அதனை அறிவித்துள்ளமை மிகுந்த மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். உன்றுபட வேண்டிய நேரத்தில் கட்சியை மேலும் பிளவுபடுத்தவே இதுபோன்ற செயற்பாடுகள் உதவும்.


2 comments:

  1. Unp யின் அடையாளத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டுத்தான் ரணில் விலகுவார் போலும்..

    ReplyDelete
  2. ரணிலையும்,அகிலவிராஜ், போன்ற சுயநல கொள்ளைக் காரர்களை சிறையில் அடைக்கும் வரை யூஎன்பீ இதன் பிறகு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.