Header Ads



UNP க்குள் ஏற்பட்டுள்ள பிரிவு நிரந்தரமில்லை, 98 சதவீதமானோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரிவானது நிரந்தரமல்ல எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஆனால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டு வரும் உட்பூசல்கள், பிரிவுகள் நிரந்தரமானவை, இது ஏப்ரல் 25ஆம் திகதிக்குப் பின்னர் மேலும் பூதாகரமாக மாறலாம் என்றார்.

இன்று (12) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

வரலாற்று ரீதியில் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி,  இன்று இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளன. எனினும் குறித்த முகாம்களில் 98 சதவீதமானோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.