Header Ads



பிரச்சாரத்தை இடைநிறுத்தியது JVP - நாட்டில் தேர்தலை நடத்தமுடியாத நிலை


நடைமுறையில் நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமுடியாத நிலை உள்ளமையை சுட்டிக்காட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று 16 வேட்புமனுவில் கைச்சாத்திட்டப்பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் தேர்தல் பரப்புரைகளில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எனினும் நடப்பில் இதனை உறுதிப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து இருப்பதால் கூட்டங்களை ஏற்பாடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமது கட்சி தேர்தல் பரப்புரைகளை இடைநிறுத்த முடிவெடுத்துள்ளது என்று அனுரகுமார குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்.

எனினும் தம்மைப்போன்ற இடதுசாரி கட்சிகள் பெருமளவு பணத்தை செலவிடமுடியாமால் பெரும்பாலும் வீடு வீடாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகின்றன.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தவுள்ளதாக அநுர குமார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.