Header Ads



அதிரடி தீர்மானங்களை மேற்கொள்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்தை நாளை -04- கூட்டியுள்ளார் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

நேற்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட கட்சிப் பிரமுகர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

அதேசமயம் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்க விசேட குழுவொன்றையும் நியமிக்க இங்கு பேசப்படவுள்ளது.

நேற்றைய சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம் பிக்களான அலவத்துவல ,கயந்த கருணாதிலக்க ,விஜேபால ஹெட்டியாராச்சி ,முஜிபுர் ரஹ்மான் ,சஞ்சய பெரேரா ஆகியோர் நேற்று மாலை ரணிலை சந்தித்துப் பேசினர் . சரியான முடிவுகளை எடுக்காமல் அரசியல் எதிர்காலத்தை இல்லாமல் செய்துகொள்ள வேண்டாமென ரணில் அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இன்று -03- கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்துள்ள ரணில் அவர்களுடன் தேர்தல் வியூகங்களை பற்றி கலந்துரையாடவுள்ளார்.

இதற்கிடையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஹரீன் பெர்னாண்டோவை அகற்றி அந்த இடத்திற்கு நவீன் திஸாநாயக்கவை நியமிக்கவும் ,மகளிர் அணி பொறுப்புக்களில் இருந்து தலதா அத்துக்கோரள – சந்திராணி பண்டார ஆகியோரை அகற்றி அந்த இடத்திற்கு யாப்பஹுவ அமைப்பாளர் அச்சினி லொக்குபண்டாரவை நியமிக்கவும் ,இளைஞர் அணிப் பொறுப்புகளுக்கு காவிந்த ஜெயவர்தனவை நியமிக்கவும் ,ஊடக பொறுப்புகளுக்கு ராஜித சேனாரத்ன , ருவன் விஜயவர்தன ,ஆசு மாரசிங்க ஆகியோரை நியமிக்கவும் ரணில் தீர்மானித்துள்ளார். sivaraj

1 comment:

  1. இந்த நாட்டில் அராஜகம், அக்கிமத்தைக் கோலோச்ச துணை போகும் ரணிலை பதவியிலிருந்து வௌியேற்ற ஒரு உபாயத்தைக் கண்டுபிடிக்க அந்தக் கட்சியில் இருக்கும் வாலிபர்களால் முடியாதா? இந்த ரணிலின் கஞ்சத்தனமும் தந்திரமும் இந்த நாட்டில் இருவகையான பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கின்றது. முதலில் பொய்யும் புரட்டும் வஞ்சகமும் கோலோச்சும் சர்வாதிகார அரசை நிலைநாட்ட ரணில் துணைபோவதுடன், பெரும்பாலும் சனநாயகம் மேலோங்கும் அரசாங்கத்தை அமைக்க பெரும் தடைக்கல்லாக இருப்பதும் ரணில் தான். இந்த நபரை இந்த நாட்டு மக்கள் உரிய முறையில் தண்டிக்காமல் விட்டுவைக்கக்கூடாது. அவ்வாறு மௌனித்து இருப்பது இந்த நாட்டுக்கும் இந்த நாட்டின் மக்களுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.