Header Ads



புத்தளம் மாவட்டமே, அச்சுறுத்தலான மாவட்டம் - Dr அனில் ஜாசிங்க

இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலர், மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

 இலங்கையை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா?Getty Images
இவ்வாறு இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலர் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தங்போது தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சுமார் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருக்குமானால் அது பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறானவர்கள் தாமாகவே முன்வந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

2 comments:

  1. இத்தாலியில் இருந்து சுரங்கப்பாதையூடாகவா அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள்? விமான நிலயத்தினூடாகத்தானே? விமான நிலயத்தில் வைத்து அவர்களை முடக்குவது அவ்வளவு கடினமான விடயமா என்ன! அவர்களை உள்ளே விட்டு விட்டு தேடுவதும் media conference செய்வதும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.