Header Ads



மஹர பள்­ளி­வாசலில் உள்ள, புத்தர் சிலை­ இன்னும் அகற்றப்படவில்லை - நாங்கள் மீண்டும் தொழ வேண்டும் என்கிறது நிர்வாகம்

100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்­கி­வந்த பள்­ளி­வாசல், தற்­போது சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டு அங்கு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்ட நிலையில், அச்சிலை இன்னும்  07.03.2020 அகற்றப்படவில்லை என பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்­ளி­வாசல் உள்ள புத்தர் சிலை அகற்றப்படுமென அமைச்சர் நிமல் சிறபால டி சில்வா, அலி சப்ரி, பைசர் மதபா உள்ளிட்ட சிலர் வாக்குறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

'பள்­ளி­வா­ச­லுக்குள் எங்­களைத் தடை­செய்­வ­தற்கு நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­களோ, பயங்­க­ர­வா­தி­களோ அல்ல. எங்­க­ளது பள்­ளி­வாசல் மீண்டும் எங்­க­ளுக்கு திருப்­பித்­த­ரப்­பட வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்­ளி­வா­சலில் தொழ வேண்டும்.' இது மஹர சிறைச்­சாலை வளாக ஜும்ஆ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.

ராகம பகு­தியில் வாழும் சுமார் 290 குடும்­பங்கள் இப்­பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்தி வந்­த­தாக பள்­ளி­வாசல் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரி­விக்­கிறார்.

1 comment:

  1. இஸ்லாமிய நாடுகளில் தான் isis என்ற இயக்கம் நிறைய அட்டூழியங்களை செய்து அதில் பாதிப்படைந்தது முஸ்லிம்களே அவ்வாறு இருந்தும் எங்கும் இஸ்லாமிய பள்ளிவாசல்களோ,பாடசாலைகளோ தடை செய்யவில்லை அதை போல் முஸ்லீம் அமைச்சர்களை விசாரிக்கவுமில்லை ஆனால் எங்கள் நாட்டில் துவேஷத்தின் அடைப்படையில் தான் முஸ்லிம்களை பெரும்பான்மையினம் செயல்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.