Header Ads



மாடு­க­ளுக்கு புது­வித நோய், மாடு அறுப்­ப­தற்கு தடை

(நுவ­ரெ­லியா நிருபர்)

நுவ­ரெ­லிய பிர­தே­சத்தில் மாடு­க­ளுக்கு கால் வாய் நோய் என்னும் புது வித­மான நோய் பர­வி­வ­ரு­வ­தாக கண்­டு ­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் நுவ­ரெ­லி­யாவில் தற்­கா­லி­க­மாக மாடுகள் அறுப்­ப­தற்கு  நுவ­ரெ­லியா மாந­கர சபை சுகா­தார அதி­கா­ரி­களால் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா மத்­திய சந்­தை­யி­லுள்ள மாட்­டி­றைச்சி விற்­பனை நிலை­யங்கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளன.  நுவ­ரெ­லியா நகரை அண்­டி­யுள்ள பிர­தே­சங்­களில் உள்ள மாடு­க­ளுக்கு புது வித­மான கால் மற்றும் வாய் நோய் மாடு­களின் சுவாசம் மற்றும் வாய் மூலம் பர­வி­வ­ரு­கின்­றது இதனால் வெளி இடங்­க­ளுக்கு மாடு­கள்­கொண்டு செல்­வ­தற்கும் மாடுகள் அறுப்­ப­தற்கு தடை விதித்­தி­ருப்­ப­தா­கவும்  இந்த நோய் குண­ம­டையும் வரை இந்த தடை நீடிக்கும் என நுவரெலியா மாநகர சபை சுகாதார அதிகாரி டி. எம். எஸ். பீ. தெல்பிடிய தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.