Header Ads



அமெரிக்காவும் சீனாவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவி

(இரா.செல்வராஜா)

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் சீனாவும் உதவிகளை வழங்கியுள்ளன.

இரசாயன ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்துதல், நோயுற்றவர்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கல் போன்ற நடவடிக்கைகளுக்காக 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த 20 வருடகாலத்தில் அமெரிக்கா சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சீனா இன்று விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது. இதில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியன அடங்கியுள்ளன.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மற்றுமொரு விமானத்தில் மேலும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க இருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்திருக்கிறது. 

2 comments:

  1. சீனாவும் அமெரிக்காவும் தான் உலகத்திற்கு corona வைரஸை பரப்பியது இந்த நாடுகளிடமிருந்து உதவி பெறுவது மிகவும் அவதானம்

    ReplyDelete
  2. சீனாவும் அமெரிக்காவும் தான் உலகத்திற்கு corona வைரஸை பரப்பியது இந்த நாடுகளிடமிருந்து உதவி பெறுவது மிகவும் அவதானம்

    ReplyDelete

Powered by Blogger.