Header Ads



முஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...


ஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப்படையை சார்ந்த ஓர் அரச ஊழியர்.
முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்த தடியை எடுக்கும் பொழுதே நாம் காவல் துறையின் அனுமதிப்பத்திரத்தையும் காட்ட நேரம் சரியாய் இருந்தது.
முஸ்லிம்த?
ஒவ் சேர்... 
எங்க போனீங்கே??
தாய்மொழியை கொலை செய்யும்பொழுது ஏதோ என்னுள் கோபம்..
சென்ற இடத்தினையும் செய்த வேலையினையும் சுருக்கமாய் சொல்லி முடித்தோம்..
ஹரி போங்க போங்க என்றார் வஞ்சனை சிரிப்போடு 
சிராவட்டம சேர் என்றோம்..
ஆப்போவ்..
முஸ்லிம் கட்டிய மாற பொறு கட்டிய என்றான்..
வந்த கோபத்தை விழுங்கியவனாக 
எய் சேர் எஹம கிவ்வே??
அத்தோடு தமிழை கொல்ல ஆரம்பித்தான்..
நீங்கள் எல்லாரும் பொய்யர்கள், 
எப்பொழுது நாம் எவரை நிறுத்தினாலும் பையில் எப்போவோ எடுத்த மருத்துவ துண்டை காட்டுகிறார்கள். கேட்டல் பிள்ளைக்கோ மனைவிக்கோ சுகமில்லை என்கிறார்கள்.
இளைஞ்சர்கள் உயர் ரக மோட்டார் சைக்கிள்களில் வந்து எங்களுக்கு ஊ கட்டிவிட்டு அல்லது தண்ணீர் பேக்குகளை வீசிவிட்டு செல்கின்றார்கள்.
அல்லது குடும்ப உறுப்பினருக்கு சுகமில்லை என சொல்லி விட்டு குடும்பம் குடும்பமாக பாபிகிவ் போட செல்கிறார்கள்.
நான் குறுக்கிட்டு கேட்டேன் உங்களுக்கு எப்படி சேர் தெரியும் அவர்கள் பாபிக்கிவ் போடத்தான் செல்கிறார்கள் என்று?
கீழே விழுந்த சாகோல் பக்கட்டை நான் தான் எடுத்து கொடுத்தேன் என்றார்..😂
நாங்கள் யாரையேனும் கைது செய்து சென்றால் 
உங்களை வெளியில் எடுக்க தொர மார் இருக்கின்றார்களே😏😏
நீங்கள் சட்டத்தையும் மதிப்பதில்லை., வந்திருக்கின்ற நோயையும் பொருட்படுத்துவதில்லை.
உங்கள் ஊரில் கடமையாற்றுவதை நினைத்தால் எமக்கு எரிச்சலாக உள்ளது என்று சொல்லி முடித்தார்.
அவர்கள் சார்பாக நாம் மன்னிப்பு கேட்டு விட்டு விடைபெறும் பொழுது கூறினார் எங்களுக்கு செய்கின்ற வேலைக்கு படுவிங்க பாடு என்று கூறிக்கொண்டே அடுத்த பைக்குக்கு கை காட்டினார்.
வெட்கத்தை வெளிக்காட்டாமல் அங்கிருந்து நகர்ந்தோம்..

""அநீதி இழைக்கப்பட்ட தரப்பினரின் பதுவாவிற்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையும் இல்லை""
அது காபிராக இருந்தாலும் சரியே.
உணர்ச்சியற்ற சமூகம் மாற்றத்தை எப்பொழுதுமே விரும்பாது.😏(நான் உட்பட)
அவர் பேசிய அரைகுறை தமிழை தவிர்த்து 
தூய தமிழில் தரவினை பதிந்துள்ளேன்.

RJ Ahmed

12 comments:

  1. தாய்மொழி ரொம்ப முக்கியமா?உங்களுக்கு அவருடைய தாய்மொழியை ஒழுங்காக பேச முடியுமா?

    ReplyDelete
  2. தமிழ் எழுத்துகளால் வார்க்கப்பட்ட மேல் உள்ள பந்திகளில் என்ன இருக்கின்றது, எந்த நோக்கமாக எழுதப்பட்டது என்பது மிகவும் சிரமப்பட்டு வாசித்தபோதிலும் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எழுதியர் குறையோ அல்லது வாசிப்பவர் குறைபாடு யார் அறிவார்?

    ReplyDelete
  3. சிலரின் பிழையான நடவடிக்கைகளால் உண்மையான தேவையுள்லோரும் பாதிக்கப்படுகின்றனர்....

    ReplyDelete
  4. Intha adihaariyin ullathilum nam makkalay nalla murayla paarkkum ennam kidayyathu.
    .silar seyhiraarhal athukkaha ottu mottha Muslims ayum kuray koorum antha adihaarikku em makkal meethu mariyaathay kidayyathu...athu Muslims mattumilla ella samiodathulayum undu...Iwanin saafakkedu nichayam namakku seraathu....
    Unmayyai Allah arinthawan...
    Kooli kuduppawan allah...
    Awanuku em makkal meethu nallennam wara dua piraathippom....aameen

    ReplyDelete
  5. Ippadithan oruvar silar sayum thawaruku sillarai nayikal mulu samukathtayum kurai sollum

    ReplyDelete
  6. பொதுவாக எமது இளைஞர்கள் பெற்றோர்களுக்கு கட்டுப்படுவதில்லை.எமது முஸ்லிம் சமூகமும் எதையும் சீரியஸாக எடுப்பதில்லை.பாதிப்பு வந்த பிறகுதான் குனூத் ஓதுவதும், நோன்பு பிடிப்பதும்,தௌபா செய்வதும்.வருமுன் காக்கும் வழக்கம் குறைவு.அரசியலிலும் அப்படித்தான் கொரோனாவிலும் அப்படித்தான்.பட்ட பின்பு ஞானம் வாழ்க்கைக்கு உதவாது.

    ReplyDelete
  7. பொதுவாக எமது இளைஞர்கள் பெற்றோர்களுக்கு கட்டுப்படுவதில்லை.எமது முஸ்லிம் சமூகமும் எதையும் சீரியஸாக எடுப்பதில்லை.பாதிப்பு வந்த பிறகுதான் குனூத் ஓதுவதும், நோன்பு பிடிப்பதும்,தௌபா செய்வதும்.வருமுன் காக்கும் வழக்கம் குறைவு.அரசியலிலும் அப்படித்தான் கொரோனாவிலும் அப்படித்தான்.பட்ட பின்பு ஞானம் வாழ்க்கைக்கு உதவாது.சொந்த புத்தியும் கிடையாது.சொல் புத்தியும் கிடையாது.நான் வைத்தியசாலையில் பணிபுரிபவர் நேற்று கேர்பியூ நேரத்தில் மாத்திரம் 7 சண்டை பிடித்த கேஸ்கள்.சரியான வெட்கமாக இருந்தது உடன் பணிபுரியும் அடுத்த சமூகத்தைச் சார்ந்த சகோதரர்கள் முகத்தைப் பார்க்க.அல்லாஹ்வே இரக்கப்பட்டு மாற்றினாலே அன்றி நாங்கள் மாறமாட்டோம்.அல்லாஹு அக்பர்.

    ReplyDelete
  8. அன்பானவர்களே!
    இலங்கயை பொறுத்த மட்டில் ஆமி பொலிஸ் மற்றும் காவல் படைகல்.சொல்லுவதையெல்லாம் அப்படியே நம்பமுடியாது.இவர்கள் அனைவர்களும் ஊர் அடங்கும் சட்டத்தை அமுளிள் வைத்துக்கொண்டு அவர்கள் இணம்சார்பாக செயல் படும் கூழிப்படைகள் இதற்கு ஆதாரங்கள் சென்றகாலங்களின் அநுபவங்கள் உதாரனமாக அலுத்கம,திகன நீர் கொழும்பு,குருநாகள், மிணுவாங்கொட,போன்ற நிகள்வுகள்.அங்கு ஊர் அடங்கு சட்டத்தை போட்டுவிட்டு என்ன செய்தார்கள்? இப்பொழுதும் அதேதான் நடக்கிறது முஸ்லிம்களுக்கு மட்டும்தானா?சட்டம் என்று தோன்றுகிறது. இன்ஷா ல்லாஹ் எல்லாம் வல்ல அல்லஹ் ஒருவனே போதுமானவன் அவனை ஈமான் கொண்டவர்களை பாதுகாக்கா!

    ReplyDelete
  9. நீங்க கூறுவது உண்மைதான் ஆனால் இது எல்லா சமூகத்திலும் உள்ளது முஸ்லிம்கள் என்றால் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லுவார்கள். இதை நீங்கள் கட்டாயம் அவரிடம் சொல்லிருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் சட்டங்களை மதிப்பது கிடையாது என்ற விடயம் இன்று நேற்று அல்ல பன்னெடும்காலமாக இங்கு நிலவி வரும் மிகவும் கெட்ட பழக்கம் என்பது எங்கள் அனைவருக்கும் கண்கூடாகத் தெரிந்த விடயம். அவசர காலங்களில் உரிய அரசவிதிமுறைகளைப் பின்பற்றாமை, ஊரடங்கு உத்தரவின்போது அவற்றைப் பினபற்றாமை, வாகனங்களுக்கு உரிய ஆண்டு வரிகளைக் கட்டாது ஏய்ப்பு செய்வது. மட்டுமன்றி அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் போன்ற பலவேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய சமூகமாக முஸ்லிம் சமூகம் இலங்கையில் காணப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த அவசர ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்தக் காலத்தில் முஸ்லிம் பகுதிகளில் நுற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. உலகம் எங்கிலும் சகல மத பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. சமய அனுஸ்டானங்கள் அனைத்தும்ட வீடுகளிலேயே நடாத்தப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சம்மாங்கோட்டுப் பள்ளியில் வைத்து உலமாக்கள் தெளிவாக இந்தக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுறுத்தப்பட்டிருந்தும் விசேடமாக முஸ்லிம்கள் அதற்கு மதிப்புக் கொடுத்த்ததாக இல்லை. அதைவிடுத்து அரசும் இனவாத ஊடகங்களும் இல்லாத பொல்லாததை இட்டுக் கட்டுகின்றனர் என்று கூறுவதே அபத்தம். கவனமாக இருந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லாம் பபாக்கள் அல்ல. பிட்டு பிட்டு வைப்பதற்கு.

    ReplyDelete
  11. இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடி பணியக்கூடாது. அதாவது காலில் விழக்கூடா து. இதனை தவறராக விளங்கிக் கொண்ட காரணமோ என்னவோ, நமது மக்கள் பள்ளித் தலைவர் அல்லது வேறு தலைவர்களுக்கு கட்டுப்படுவது இல்லை. விசேஷமாக வீடுகளில் பெற்றாரும் பிள்ளைகளுக்கு முன்னாடி பிறரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்வதும் ஒரு காரணம். எனவே பிறரையும், சட்ட திட்டங்களையும் மதிக்கும் பழக்கம் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  12. இது என்ன அநியாயம்? எல்லா சமூகத்திலும் இப்படி பலர் உண்டு அதை போல் முஸ்லிம்களிலும் உண்டு சிங்கள இனவாதிகளுக்கு முஸ்லிம்கள் என்றால் எல்லாமே கெடுதியாக தெரிந்துபோனதால் முஸ்லீம் சமூகத்திலுள்ள சில சைக்கோ மட்டைகளும் முஸ்லீம் சமூகத்தை பற்றிய குறையை பற்றி யார் பேசினாலும் பாய்ந்து அடித்துக்கொண்டுவந்து இவர்களும் இவர்கள் குடும்பத்திலுள்ளவர்களும் ஏதோ எல்லாவிடயத்திலும் சரியாக வரிகளை கட்டி, நடந்துகொள்வதைப்போல் இங்கு கருத்து சொல்கிறார்கள். இவர்களும் ஒருவகை சைக்கோக்கள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.