Header Ads



கொரோனா உள்ளவரை வெறுத்தல், எதிர்ப்பு தெரிவித்தல், மனிதநேயத்துக்கு பொருத்தமானதல்ல - மஹிந்த

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். இலங்கை முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும். அறிவு மற்றும் ஐக்கியம் என்பவற்றுடன் முன்னோக்கிப் பயணித்து வைத்திய ஆலோசனைகளைக் கடைப்படித்து சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்தொடர்பாக இலங்கை மக்கள் அடைந்துள்ள அச்சம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 

நோய் தொற்றுக்குள்ளான நோயாளிகளை வெறுத்தல், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் மனிதநேயத்துக்கு பொருத்தமானதல்ல. 

இன்று உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எமது நாட்டுக்கும் இது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி இது தொடர்பில் கூடுதலான கவனத்துடன் செயற்பட்டு வருகிறார். சுகாதார பிரிவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், வைத்திய ஆலோசனைகளையும் பொது மக்களுக்கு வழங்கியுள்ளது. 

தேவையான மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. நாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களும் கையிருப்பில் உள்ளன. ஆகவே, பொது மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.