Header Ads



இலங்கை,, இத்தாலியாக மாறுவதனை விரும்பவில்லை - எதிர்வரும் நாட்களில் கடும் நடவடிக்கை எடுப்போம் - ஜனாதிபதி

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இதே முறையில் நீடிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இன்றைய -25 - அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் ஏதேனும் ஓர் வழியில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கண்டறியப்பட்ட நோயாளி யாருடன் தொடர்பு பேணியுள்ளார் என என்பது குறித்து ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், இலங்கை இத்தாலியாக மாறுவதனை விரும்பாத காரணத்தினால் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. Most of the Sathosa outlets have been closed/vacated permanently in the city of Kalmunai.

    ReplyDelete
  2. எல்லாம் ஓகே தான், ஆனா தளர்த்தும் போதும் மக்கள் நெரிசல் தொடர்பில் கவனமெடுக்க படுவதில்லை. இதை வெளியில் வரும் மக்களும் உணர்ந்து செயட்படுவதில்லை

    ReplyDelete

Powered by Blogger.