Header Ads



கொரோனா தொடர்பில், இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் தொற்றானது, வெப்பநிலையில் அதிகரிக்கின்றதா? குறைகின்றதா? என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லையென தெரியவந்துள்ளது. 

மேற்படி தகவலை, விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் நோய் குறித்து, ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும் என தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பெரும்பாலானோருக்கு பொதுவான நோய் நிலைமையாக ஏற்படக்கூடியது. சிலருக்கு சிக்கலைக்கொண்டதாக ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அனர்த்த வலயத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் அவதானத்துடன் செயற்படவேண்டுமென அவர் தெரிவித்தார்.

இக்கொரோனா வைரஸ் இருமல், தும்மலின் போதும் வெளியேறும் எச்சில் மூலமும் பரவக்கூடும். காற்றின் மூலம் இது பரவக்கூடிய தன்மை மிகவும் குறைவானதாகும் என்றும் விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.