Header Ads



பாரிய முதலீட்டுக்காக இலங்கை, வரவிருந்த கோடீஸ்வரர் யூசுப்அலி - கொரோனா அச்சத்தினால் பயணம் ரத்து


இலங்கைக்கு வரவிருந்த ஐக்கிய அரபு ராச்சியத்தை தளமாகக்கொண்ட இந்திய கோடீஸ்வரரும் லுலு சர்வதேச குழும நிறுவனத்தின் தலைவருமான யூசுப் அலி, கொரோனாரவைரஸ் தொற்று பரவுகை அச்சம் காரணமாக தமது பயணத்தை ரத்துச்செய்துள்ளார்.

இலங்கையில் அவர் பல்வேறு பாரிய முதலீட்டு திட்டங்கள் தொடர்பாக பேச்சு நடத்தவிருந்தார்.

அலி எதிர்வரும் 15ஆம் திகதியன்று இலங்கைக்கு வரவிருந்தார், இலங்கையில் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் சந்திப்பபுக்களை நடத்தவிருந்தார்.

இதன்போது ஒரு பில்லியன் டொலர்கள் தொடர்பான முதலீடுகள் தொடர்பான விடயங்களும் அடங்கியிருந்தன.

ஐக்கிய அரபு ராச்சியத்தின் சுகாதார அமைச்சு விடுத்த கொரோனாவைரஸ் எச்சரிக்கையை  அடுத்தே அலி தமது பயணத்தை ரத்து செய்துள்ளார். லுலு சர்வதேச குழுமத்துக்கு சர்வதேச ரீதியாக லுலு ஹைப்மார்க்கட் சந்தை வலையமைப்பு தளங்கள் உள்ளன.

இந்தநிலையில் போபரஸ் பட்டியலின்படி யூசுப் அலி 5.2 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் 21வது இந்திய பணக்காரராக தெரிவானார். மத்திய கிழக்கில் அவர் முதல் பணக்காரராக தெரிவானார்.

No comments

Powered by Blogger.