Header Ads



கொரோனாவை வெற்றிகொள்ள 'உதேசா கம சுரகிமு'


(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தத்தினால், தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ளவும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் 'உதேசா கம சுரகிமு' செயற்திட்டம் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன  பெரமுனவின் ஸ்தாபகர் ஆலோசனை வழங்கினார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில்  அலரி மாளிகையில் இடம் பெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டு பொருளாதார வளர்ச்சியில் கிராமிய உற்பத்திகள் பெரும்பங்காற்றுகின்றன துரிதகரமாக தேசிய உற்பத்திகளை நிலைப்படுத்த வேண்டும் .

கிராமிய வங்கி ஊடாக சுயத்தொழில் நடவடிக்கைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் கிராமிய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்குவது அவசியம் என்றார்.

1 comment:

  1. Sri Lanka Muslims should support this action fully and wholeheated and participate in it as "PARTNERS", Insha Allah. THERE IS NO NEED FOR THE ACJU TO CREATE A PARELL SYSTEM FOR DISTRIBUTION OF FOOD DONATIONS. MUSLIM DONORS AND PHILANTHROPISTS SHOULD CONTACT THIS TASKFORCE UNDER BASIL RAJAPAKSA AND MAKE ARRANGEMENTS TO HAND OVER THEIR DONATION, Insha Allah. President Gotabaya Rajapaksa and his team know better how to handle the situation that these MUNAFIQUES who alway want to "CREATE" conflict with the Government and the Majority community. Sri Lanka Muslims whould be very vigilant and alert about these MUNAFIQUES at this moment and in the future, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.