Header Ads



இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு, உதவிக்கரம் நீட்டிய உலகின் பணக்காரர்

கொரோனா வைரஸால் உலகின் பல்வேறு நாடுகள் தவித்து வரும் நிலையில், ஜாக்மா அறக்கட்டளை மற்று அலிபாபா கட்டளை இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

உலகின் சுமார் 160-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.

இதனால் உலகின் செல்வந்தர்கள், நடிகர் மற்றும் நடிகைகள் போன்றோர் தங்களால் இயன்ற உதவியை கொரோனாவால் சிக்கி தவிக்கும் நாட்டிற்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சீனாவின் பிரபல ஆன்லைன் வர்த்தகமான அலிபாபாவின் உரிமையாளரும், உலக செல்வந்தர்களில் ஒருவருமான ஜாக் மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவால் தவிக்கும் ஆசிய நாடுகளுக்கு உதவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Jack Ma

அதில், ஆசியாவிற்கு கிளம்புகிறது என்று குறிப்பிட்டு, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கம்போடியா, லாவோஸ், மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு அவசரகால பொருட்களாக (1.8 மில்லியன் முகமூடிகள், 21 லட்ச சோதனை கருவிகள், 36 ஆயிரம் பாதுகாப்பு கருவிகள், பிளஸ் வென்டிலேட்டர்கள் மற்றும் வெப்பமானிகள்) நன்கொடையாக அளிப்போம். வேகமாக வழங்குவது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் அதை முடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.