Header Ads



கொரோனா நோயாளர்களுக்காக, இலங்கை வைத்தியர்களின் அர்ப்பணிப்பு

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கடும் அர்ப்பணிப்பு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் சேவை தொடர்பில் கருத்து வெளியிட்ட கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையின் வைத்தியர்,

நாங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு செல்லாமல் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சேவை செய்கின்றோம். முழுமையான வைத்தியசாலை ஊழியர்களும் கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளுடனேயே உள்ளோம்.

வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய ஊழியர்கள் ஒரு நிமிடமேனும் அணிந்திருக்க கடினமான, விண்வெளிக்கு செல்லும் ஆடையை போன்ற ஆடை ஒன்றே அணிந்து, வியர்வையில் வெந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சேவை செய்கின்றோம்.

ஏனைய அனைத்து ஊழயர்களும் தங்கள் சேவையை முழுமையாக வழங்குகின்றோம். நாங்கள் எங்கள் முழுமையான பணியை செய்கின்றோம். நோயாளர்கள் சிறிது சிறிதாக குணமடையும் போது நாங்கள் எங்கள் தூக்கம் பசியை மறந்து விடுகின்றோம்.

எங்கள் ஊழியர்கள், நெருக்கமானவர்கள், நண்பர்கள் மற்றும் நாங்கள் தங்கும் அறைகளில் உட்பட நாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு இவற்றை குறித்து கவலையில்லை. அனைவரும் தங்கள் உயிர் மீது அன்பு வைத்துள்ளார்கள்.

நாங்கள் இவை அனைத்தையும் பல்வேறு குறைப்பாடுகளுக்கு மத்தியிலேயே செய்கின்றோம். இராணுவம், விமான நிலைய ஊழியர்கள் வழங்கும் சேவைகளும் மிகவும் பெரியது. எங்கள் உயிர் அச்சுறுத்தல் குறித்து எண்ணாமல் நோயாளிகளை பார்த்துக் கொள்கிறோம். முடிந்த நாள் ஒன்றில் வீட்டிற்கு செல்வோம்.

நீங்கள் எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும் தனிமைப்படுத்தலுக்கு உதவுகள். எங்கள் நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு அதுவே ஒரே வழியாக உள்ளது. நீங்கள் ஒரு போதும் ஒதுக்கப்பட மாட்டீர்கள். அது குறித்து அச்சப்பட வேண்டாம்.

இந்த அனைத்து அர்ப்பணிப்பும் நாட்டிற்காகவே செய்கின்றோம். நீங்கள் யாரும் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருங்கள். எங்கள் கஷ்டங்கள் நன்மையை ஏற்படுத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. We are salute for you all. God bless you all.

    ReplyDelete

Powered by Blogger.