March 03, 2020

ஹஸன் அலி உட்பட அனைவரையும், மீள இணையுமாறு ஹக்கீம் அழைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து விலகிச் சென்ற அனை­வ­ரையும் மீண்டும் கட்­சியில் இணைந்து கொள்­ளு­மாறு மனப்­பூர்­வ­மாக அழைப்­பு­வி­டுப்­ப­தாக கட்­சியின் தலைவர்
ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்டார். அதிலும் குறிப்­பாக கட்­சியின் முன்னாள் செய­லாளர் நாயகம் ஹஸன் அலி, கட்­சி­யி­லி­ருந்து விலகிச் சென்­றதால் தான் அதிகம் வருத்­தப்­பட்­ட­தா­கவும் அவர் இங்கு சுட்­டிக்­காட்­டினார்.

கண்டி பொல்­கொல்­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற கட்­சியின் 29 ஆவது பேராளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இந்த இயக்­கத்­தி­லி­ருந்து சரி­யா­கவோ, பிழை­யா­கவோ தடு­மாற்­றத்தின் கார­ண­மா­கவோ அல்­லது அவர்கள் சொல்­கின்ற நியா­யங்­க­ளின்­பாற்­பட்டோ பிரிந்து சென்­ற­வர்கள் எங்­கி­ருந்­தாலும் இந்த இயக்­கத்தில் வந்து மீண்டும் இணைந்து கொள்­ளு­மாறு அவர்­க­ளுக்கு மிக மனப்­பூர்­வ­மாக அழைப்பு விடுக்­கிறேன்.

இந்த இயக்­கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாளி­லி­ருந்து நானாக யாரையும் வலுக்­கட்­டா­ய­மாக கட்­சி­யி­லி­ருந்து விரட்ட வேண்­டு­மென்ற நோக்­கத்தில் செயற்­பட்­டது கிடை­யாது.

அவ்­வப்­போது ஒவ்­வொ­ரு­வரும் பல்­வேறு வித­மான காரண காரி­யங்­களைச் சொல்லி இந்த இயக்­கத்தை விட்டு விலகிச் சென்­றாலும் இந்த நாட்டு முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த ஆணையைப் பெற்ற அர­சியல் தலைமை, கட்சி இது என்­பதை நாங்கள் மாறி மாறி பல தேர்­தல்­க­ளிலே நிரூ­பித்து வந்­தி­ருக்­கிறோம்.

எனது ஆதங்கம் ஒன்றை இந்த இடத்தில் சொல்­லி­யாக வேண்டும். விலகிச் சென்ற எல்­லோ­ருக்கும் பர­வ­லாக நான் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறேன். ஆனால் குறிப்­பாக கட்­சியின் முன்னாள் செய­லாளர் நாயகம் ஹஸன் அலி அவர்­களை இங்கு ஞாப­கப்­ப­டுத்த வேண்டும். அவர் இந்தக் கட்­சியின் ஆரம்ப காலப் போராளி மாத்­தி­ர­மல்ல, அவர் இந்தக் கட்­சியை விட்டும் தூர வில­கி­யி­ருப்­பதன் வருத்தம் என்னை விட வேறு யாருக்கும் அதிகம் இருக்க முடி­யாது.

ஆனால், அவ­ரு­டைய செயற்­பா­டுகள் கட்­சியின் தலை­மையை மீறி சுய­நல அர­சி­யலை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருந்­தன என்று இட்­டுக்­கட்­டப்­பட்ட சில கதை­களை அவர் விலகிச் சென்­றதன் பிற்­பாடு ஒரு சிலர் சொல்­லித்­தி­ரி­வ­தான ஆதங்கம் அவ­ருக்கும் இருப்­ப­தாக நான் கேள்­விப்­ப­டு­கிறேன். அவர் இந்தக் கட்­சியில் இருந்த கடைசி நிமிடம் வரை தலை­மைத்­து­வத்தின் கட்­ட­ளை­களை ஒரு­பொ­ழுதும் மீறிச் செயற்­ப­ட­வில்லை என்­பதை நான் மிகத் தெளி­வாகக் இங்கு சாட்­சி­யம்­கூற விரும்­பு­கிறேன். இந்தக் கட்­சி­யி­லி­ருந்து தூர விலகியிருந்து, கட்சிக்கு விரோதமான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட்டாலும்கூட அவர்களது மனம் புண்படுகின்ற வகையிலே நாங்கள் நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment