March 09, 2020

அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட முஸ்லிம்கள்

ஞானசார என்வரை வைத்து ஆட்சியை பிடித்தவர்கள் அதே ஞானசாரவை வைத்து அரசியல் செய்யும் இழிநிலைக்கு  நல்லாட்சி வந்திருக்கிறது.மஹிந்த ஆட்சியில் கல்லெறியும் போது ரணில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் நல்லாட்சியில் துப்பாக்கி வேட்டுக்கள் பறக்கிறது ரணில் பிரதமராக இருக்கிறார். இதை முஸ்லிம் சமூகம் கவனிக்க மறக்கக்கூடாது.

மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கத்தின் கதாபாத்திரங்களாக இருக்கும் முஸ்லிம் தலைமைகளை முஸ்லிம்களை இனியும் நம்புவது பயனற்றது. ஏனெனில்,அவர்கள் ஒருபோதும் எதிர்க்கட்சி அரசியல் செய்ய திராணியற்றவர்கள். அரசாங்கத்திற்கு குடைபிடிக்கும் போது அவர்களால் வேட்டியை எப்படி மடித்துக் கட்ட முடியும். எனவே,முஸ்லிம் சமூகம் புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த அரசாங்கம் சொல்லாத,செய்யாத பாரதூரமான விடயங்கள் நல்லாட்சியில் சர்வ சாதரணமாக நடக்கிறது. முஸ்லிம் சமூகம் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நல்லாட்சி ஒரு அநியாயத்தை இன்னொரு அநியாயத்தால் மறக்கடிக்கச் செய்கிறது. 

யூதர்கள் இந்த உலகிற்கு வந்த நபிமார்களில் பலரைக் கொன்றவர்கள். முஸ்லிம்களுக்கு எங்கு, எப்படி அடித்தால் வலிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதை அவர்கள் அடிக்கடி செய்து அவர்களுக்கு  வேண்டியதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நடப்பது நல்லாட்சி என்று நாங்கள்தான் சொல்கின்றோம். உண்மையில் நடப்பது யூதர்களுடைய செல்லப்பிள்ளையான ரணிலுடைய ஆட்சி என்பதை கவனிக்க மறந்துவிட்டோம்.

வில்பத்து வர்த்தமானியில் ஓப்பமிட போன மைத்திரி ரஷ்யாவிடம் இருந்து என்ன ஒரு விடயத்தை சாதித்து நாடு திரும்பினார்.?! வில்பத்து மக்கள் வீதிக்கு இறங்கி ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் இருந்தும் தான் நேரடியாக சம்பந்த பிரச்சினை என்று கூட தெரிந்தும் முஸ்லிம் காதாபாத்திரங்களை வைத்து எம்மை வேப்பை காட்டினாரே தவிர, மக்களை நேரில் சந்திக்கவோ அல்லது ஒரு அறிக்கை மூலமோ அம் மக்களின் போராட்டத்திற்கு மைத்திரி பதில் வழங்கவில்லை. 

(கடந்த காலங்களில் மஹிந்த இப்படி இருக்கவில்லை நேரடியாகவும்,செய்மதி திரையுனூடாகவும் மக்கள் சந்திப்பை ஏற்படுத்தி பிரச்சினைளுக்கு தீர்வு வழங்கிய வரலாறுகளை ஏராளமாக கண்டிருக்கின்றோம்)

மாணிக்க மடு புத்தர் சிலை விவகாரம், கிழக்கு விவகாரம் அதுவும் அம்பாறை விவகாரம், என்பதால் அதில் நல்லாட்சிக்கு கொதிப்பு அதிகமாக இருக்கிறது. மாணிக்கமடு சம்பந்தமாக அத்தனையும் வழங்கி பூசாரிகளையும் அனுப்பி சிலையையும் வைத்துவிட்டு, தோப்பூரில் உள்ள முஸ்லிங்களுக்கு அடி விழுகிறது. சத்தம் போட்டால் இதுதான் நடக்கும் என துப்பாக்கி வேட்டுக்கள் பறக்கிறன. (2009க்கு பிறகு மஹிந்தவின் ஆட்சியில் கடலிலும் கூட கேட்கவில்லை, தற்போது ரணிலுடைய ஆட்சியில் பௌத்த விகாரைக்குள் இருந்து கேட்கிறது)

மோடியை கொண்டு வந்து வெசாக் பண்டிகை கொண்டாடிய ரணிலும் மைத்திரியும் முஸ்லிம்கள் முகத்தில் செருப்பால் எரிந்தது போல் பானந்துறை பஸார் பள்ளியில் கைக்குண்டுத் தாக்குதலும், வெல்லம்பிட்டிய ஜும்மா பள்ளிவாயலில் கல்விச்சும் இனவாதிகளால் நடத்தப்படுகிறது.

இத்தனைக்கும் மத்தியில் நாட்டில் ஜனாதிபதி இருக்கிறார். பிரமர் ஹக்கிமோடு உலக சுற்றித்திரிகிறார். நடவடிக்கையை காணவில்லை.

GSP+ வரிச்சலுகைக்காக அசிங்கத்தை அரங்கேற்றி கொடியை பறக்கவிடுகிறார்கள். சலுகைக்காக நல்லாட்சி முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் எதை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் சலுகையை அதிகரிக்க ரணில் மியன்மார் அதிபரின் கதை கேட்டு இன்னும் எதை எழுதிக் கொடுத்தாரோ தெரியவில்லை. இவைகளை மறைக்க, அதற்கு எதிராக முஸ்லிம் தரப்பிடமிருந்து வரும் சூட்டைத்தனிக்க, இப்போதே பூதங்களை ரணில் அவிழ்து விட்டிருக்கிறார்.

ஞானசார ஒரு வேடதாரியே தவிர பௌத்த துறவியல்ல அது நம்மை விட சிங்கள மக்களே நன்கரிவர்.

பலஸ்தீன் கைதிகளுக்காக மகிந்த ராஜபக்ஷ ஆதரவு கையெழுத்து இட்டார். ஆனால் மைத்திரியோ ரணிலோ அந்தப் பக்கம் கூட தலைவைத்து படுத்ததார்களா என்பதுகூட தெரியவில்லை. இதிலிருந்து இவர்கள் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களை வெறுப்பவர்கள் என்பது புரிகிறது, இவர்களுக்கு முஸ்லிம் நாடுகளோடு எந்த தொடர்புமில்லை என்பதை ஈச்சம் பழ வரி என்று உசுப்பிப் காட்டிய போது புரிந்தது. ஆனால் அதையும் கொடுத்துத்தான் சவூதி ஒட்டு மொத்த இலங்கைக்கும் ஈச்சம் பழத்தை பிச்சையாக கொடுத்திருக்கிறது. என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். (ஆனால் மஹிந்தவை முஸ்லிம் நாடுகள் நேசித்தன அவர் வேண்டியதை கொடுக்கும் நாடுகளாக இருந்தவைகள் அத்தனையும் முஸ்லிம் நாடுகள்தான், ஆனால் அன்டைய நாடான பாக்கிஸ்தானை கூட நல்லாட்சி நற்பு கொள்ளவில்லை..)

காலிமுகத்திடல் ஜனத்திரல் நல்லாட்சிக்கு மாத்திரம் பாடம் சொல்லவில்லை  முஸ்லிம்களுக்கும் மிக அருமையான பாடத்தை சொல்லி இருக்கிறது. நாளை ஒரு தேர்தல் வந்தால் சிறுபான்மை மக்கள் தோற்கடித்து வெற்றி கொண்டாடிய "நான்கு லட்சம் வாக்குகளை" மஹிந்தவுக்கு வழங்க தயாராக சிங்கள மக்கள் தயாராகிவிட்டனர். முஸ்லிம்கள் விரோதியாக பார்க்கும் மஹிந்தவை நண்பனாக்கிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. அவரும் பாடம் பெற்றவர்தான் இனி கவனமாக கையால்வார்.

எனவே முஸ்லிம் கதாபாத்திரங்களை புறக்கணித்து புதிய பாத்திரங்களுடன் தனது பங்கை பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் முன்வார வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்போதுள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் கலிமா சொல்ல வேண்டும்.

மஹிந்தவை தோற்கடித்து வெற்றியாக கொண்டாடும் முஸ்லிம்கள் நல்லாட்சியில் திண்டாடும் போது கவலையளிக்கிறது.

ஞானசாரவை வளர்த்தது யார் அவிழ்த்து விடுவது யார்? என்பதை சூடு கண்டு முஸ்லிம் சமூகம் உணர்ந்திருக்கிறது.

(நெருப்பு சுடும் என்பது உண்மை சுட்டபின் நம்புவது எதார்த்தம்)இந்தியப் பிரதமர் வருகையில் வடகிழக்கு இணைப்பிருக்கிறது. மஹிந்த பெற்றுத்தந்த சுதந்திரம் பறிபோகப்போகிறது. முஸ்லிம் சமூகம் புத்தியோடு நடந்து கொள்ளுங்கள். 

அஹமட் புர்க்கான்

2 கருத்துரைகள்:

கருத்து நாயகர்கள் கூடிய மாதிரி யாரும் கூடவில்லை.

புர்க்கான், தற்போது பெரும்பாலான முஸ்லிம்கள் நிலைமையை நன்கு உணர்ந்துள்ளனர்.இருப்பினும் மு.கா இனதும் ம.கா இனதும் தலைவரகளது எச்சங்களை உண்டு வயிறு வளர்த்த , வளர்க்க நினைக்கும் ஒருசிலர் பாமர மக்களை குழப்பத்திற்கு உட்படுத்த எத்தனிப்பர்.
ஆனாலும் கடந்த கால பருப்புப் போல் இம்முறை அப்படி இலகுவாக வேகாது.
கணிசமான மக்கள் மொட்டுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.

Post a comment