Header Ads



நாட்டுக்காக மேற்கொண்டு வரும் சேவையை நிறுத்த போவதில்லை

தன் மீது யார் என்ன குற்றத்தை சுமத்தினாலும் தனக்கு கொரோன தொற்றும் வரை நாட்டுக்காக மேற்கொண்டு வரும் சேவையை நிறுத்த போவதில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த பத்து தினங்களாக தினமும் 4 மணி நேரம் மாத்திரமே நித்திரை கொண்டுள்ளேன். நாட்டுக்காக எந்த சவால் வந்தாலும் நாட்டுக்காக சேவையாற்றுவதை நிறுத்த போவதில்லை. எனவும் அவர் கூறியுள்ளார்.

இத்தாலியில் உள்ள இலங்கை பெண்ணொருவர் அஜித் ரோஹன மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வெளியிட்டிருந்த காணொளி தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் கொரோனா காரணமாக இறக்கும் நபர்களை ட்ரக் வண்டிகளில் ஏற்றிச் சென்று மொத்த சடலங்களையும் ஒரே குழியில் புதைப்பதாகவும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல் அவர்களை மரணக்க விடுவதாகவும் அஜித் ரோஹான தொலைக்காட்சி விவாதங்களில் கூறியிருந்தாகவும் அவரது இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனக் கூறி இத்தாலியில் உள்ள இலங்கை பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளில் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அஜித் ரோஹனவின் இந்த கருத்துக்கள் அடங்கிய காணொளிகளை தாம் இத்தாலியில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் அதனை மொழிப்பெயர்த்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.