Header Ads



இன்றுமுதல் நாட்டில், தேர்தல் சட்டம் நடைமுறை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 3 முதல் நாட்டில் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் ஆசிர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1981 இலக்கம் 1 தேர்தல் சட்டத்தில், வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம் மற்றும் அரசியல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமய நிகழ்வுகளின் போது கட்சி உறுப்பினர்களை ஊக்குவிக்கும் செயற்பாடு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.