Header Ads



அரசாங்கத்தின் செலவுகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி அவர்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இன்று 2020 மார்ச் 06ஆம் திகதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் செலவுகள் உட்பட அரசாங்கத்தின் செலவுகளை மேற்கொள்வதற்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளார்.
  
அந்த வகையில் அமைச்சுகளுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவைகள் மற்றும் ஏனைய செலவுகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.06

1 comment:

  1. இடைக்கால பட்ஜெட் பொதுவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது பாராளுமன்ற பெரும்பான்மையில் அங்கீகாரம் பெறப்பட்டால்தான் அந்த பணத்தை திறைசேரி செலவழிக்கலாம் என சட்டம் இருப்பது தான் நாம் அறிந்த சட்டம். இது தவிர நாட்டின் நிதியை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் நாட்டின் சனாதிபதிக்கு இருக்கின்றது என இப்போது தான் கேள்விப்படுகின்றோம். அதுபற்றி விசயம் அறிந்தவர்கள் இங்கு தௌிவுபடுத்தினால் அனைவருக்கும் பிரயோசனமாக இருக்கும் என நம்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.