Header Ads



வாழ்க்கையில் கொரோனா, உருவாக்கிய திருப்புமுனை

நான் தெஹிவளையில் வசிக்கும்  ஒரு கோடீஸ்வரன் என்று கூறினாலும் அது பொய்யாக மாட்டாது.
ஏனென்றால் அல்லாஹ் பல Company களின் சொந்தக்காரனாக என்னை ஆக்கியுள்ளான்.

அன்று செவ்வாய்க்கிழமை காலை ஊரடங்கு (Cafew) தளர்த்தப்பட்ட போது நானும் எனது வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக புறப்பட்டுச் சென்றேன்.

தெஹிவளை சந்தி கடுகு மணியால் நிரப்பப்பட்டது போல் தெரிகிறது. மக்கள் வெள்ளம் அலை மோதுகின்றது.

என்னுடைய Car ஐ நிறுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நேரமும் நெருங்குகின்றது. எப்படியோ Car ஐ ஒரு வீட்டின் முற்றத்தில் park பன்னினேன்.

நேரம் 10 கிறது. பதட்டமடைந்தவனாக தெஹிவளை Super market க்கு ஓடோடி வருகிகிறேன். வாழ்க்கையில் இவ்வாறு பாதையில் அலைந்ததே கிடையாது.

நான் சற்று உடல் பருத்தவன் என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது. அங்கு வந்து பார்த்தால் Super market எது என்று கூட விளங்கவில்லை. மிகப் பெரும் மக்கள் கூட்டம் அங்கு.  Q (வரிசை) எங்கு ஆரம்பமாகின்றது; எங்கு முடிகின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.

கடும் வெயில், தலையில் இருந்து தண்ணீர் போல வியர்வை வழிந்தோடுகின்றது.    A/C யிலே வாழ்ந்த எனக்கு, என்னுடைய வாழ்வில் என்றுமே அனுபவிக்காத ஒரு தருணம் அது.

அங்கு நின்று கொண்டு செய்வதறியாது தடுமாறுகிறேன். 5 மாதக் குழந்தைக்கு பால் மாவும் எடுக்க வேண்டும் ; எனக்கு Suger  டெப்ளட் எடுக்க pharmacy க்கும் செல்ல வேண்டும். கதிகலங்கியவனாக நடுத் தெருவில் நான். 

இவ்வாறு கடைகளுக்குச்  சென்ற பழக்கமும் இல்லை. ஏன் வழமையில் Servant மார்தான் வெளித் தேவைகளுக்குச் செல்வார்கள்.

மனைவியின் Call  உம் வருகிறது. "இது சாமன் எல்லம் எடுத்தாச்சா? கோதம்மாவும் கொண்டுவாங்கோ." 

இந்த Super market ல நெருங்கவும் முடியாது என உள்ளம் சொல்கிறது.  Normal சில்லறக் கடையில சரி அத்தியவசியப் பொருட்களை வாங்குவோம் என பெட்டிக் கடை ஒன்றிற்கு வந்தால் அங்கும் மக்கள் திரள்.

நேரமும் 12.15 ஆகிறது. பசியும் தாகமும் வாட்டுகின்றது. அந்தக் கடையின்  Q(வரிசையி)ல் நிற்கிறேன். எனக்கு முன்னால் என்னுடைய Company யின் Gate keeper ரபீக் நானா இருக்கிறார். நாம் அனைவரும் ஒரே வரிசையில் தான்.

நாளை மஹ்ஷர் மைதானத்திலும் இவ்வாறு தான். ஏழை பணக்காரன், படித்தவன் பாமரன் என்ற வேறுபாடு கிடையாது என்று கல்பு சொல்கின்றது.

"செல்லுங்கோ!  ஒங்குலுக்கு என்ன வேணும்? "
"5 kg வெங்காயம் தாங்கோ."
 "நானா 500g தான் தரேலும்."

கோடிக்கணக்கான சொத்து இருந்தும், கோடிக்கணக்கான ரூபாய்கள் இருந்தும் 1kg வெங்காயம்  கூட வாங்க முடியவில்லையே என்று கல்பு சொல்கின்றது.

மனிதா! நீ சம்பாதித்த பணமோ பட்டமோ பதவியோ உனக்கு எந்த பயனையும் அளிக்காது  என்று மிம்பர் மேடைகளில் ஒலித்த அல்குர்ஆன் வசனம் அப்போது தான் விளங்கியது.

"உங்கட சாமான் எல்லாம் போட்டாச்சி , எடுங்கோ."  

பொருட்கள்  சிலதை எடுத்தும் எடுக்காததுமாக  வீட்டுக்கு வந்தேன்.

அப்போதுதான் இவ்வுலக வாழ்க்கையின் உண்மை விளங்கியது.

பாங்கு சொன்னாலும் மஸ்ஜிதுக்குச் செல்லாமல் பணம் பணம் என்று சம்பாதித்த எனக்கு பணத்தால் எந்த ஒன்றும் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொண்டேன்.

நான் செய்யாத பாவங்களே கிடையாது எனும் அளவுக்கு வட்டி, பொய், அநியாயம்,கொலை, கொள்லை  என பஞ்சமா பாதகங்களில் வீழ்ந்து நாசமாகி விட்டேன்.

இப்போதுதான் உணர்கின்றேன். பாவங்களிலிருந்து மீண்டு உண்மையான தௌபா செய்ய வேண்டும். அல்லாஹ்விடம் எனது பாவக்கறைகளுக்காக அழுது மன்றாட வேண்டும்.

இவ்வுலக வாழ்வு பொய்யானது என்பதை எனது நாவு சொல்லவில்லை மாறாக எனது  உடம்பில் ஓடும் இரத்த  நாளங்கள் சொல்கின்றது.

பதுக்கிப் பதுக்கிச் சேகரித்த அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி அவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்.

உலகில் ஒரு சிறந்த மனிதனாக வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை.

எனக்கு இப்பொழுது பயமாக இருக்கிறது. நான் செய்த பாவங்களால் தான் முழு உலகத்திற்கும் இந்தக் கொரோனா.என கண்ணீர் வடிக்கிறார்.

 தனக்குத் தானே அநீதி இழைத்துக் கொண்ட என்னுடைய அடியார்களே! நீங்கள் என்னுடைய அன்பை விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான். ( 39:53) 

ஒருவருடைய வாழ்க்கை யின் மாற்றமே உங்களுடைய சுவர்க்கத்திற்கு போதுமானதாகும்.

✒️அரபாத் ஸைபுல்லாஹ் ( ஹக்கானி )
திஹாரிய


2 comments:

  1. Well documented story and let all learn some lessons from it. This virus has been giving some good lessons to humanity. Many people will return to Allah after this. death is sure but people will quickly forget it..

    ReplyDelete
  2. இங்கு எழுதப்பட்ட விடயங்கள் இருக்கின்றனவே அதுதான் உண்மை. அல்லாஹ் தந்ததைக் கொண்டும் தராததைக் கொண்டும் தரப்போவதைக் கொண்டும் எங்களைச் சோதிப்பான். ஷைத்தான் எங்களுடைய இணைபிரியாத் தோழன். எங்களுடைய கல்ப் எமது வழிகாட்டி. நாங்கள் யாருக்காக உழைக்கின்றோமோ அவரகள் எங்களுக்கு வழிகாட்டமாட்டாரகள். எங்களுக்கு முடியுமானவரை ஏழைகளுக்கும் அயலவரகளுக்கும் உறவினர்களுக்கும் உதவுதல் மிக முக்கியமானது. இஸ்லாத்தில் சொல்லப்படாத வழிமுறைகள் இல்லை. கற்று ஆய்ந்து அதன்படி எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எங்கள் பாவமன்னிப்புக்கு அவையே நிரந்தரமாகக் கைகொடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.