Header Ads



ரணிலும், சஜித்தும் ஒன்றுபட றிசாத் அழைப்பு

நாட்டிற்கு நல்லாட்சியை வழங்க ரணிலும், சஜித்தும் ஒன்றுபட அழைப்பு விடுப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா அருந்ததி மண்டபத்தில் இன்று -14- இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் கூடி முடிவெடுத்ததன் பிரகாரம் அனைத்து இனத்தவரையும் பிரதிபலிக்கின்ற பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பெரும் சக்தியாக இந்த தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம்.

இன மத பிரிவினை அற்ற அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்துவது எமது எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்பதென்பது அவர்களது கட்சி ஆதரவாளர்களுக்கு அவர்கள் செய்யும் அநியாயமாகும்.

எனவே இந்நிலையில் இருசாராரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியகுழுவில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பிலே கலந்து கொள்வதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும்.

அதனூடாகத்தான் அதிக ஆசனங்களை பெறமுடியும். அதனூடாகவே ஆட்சி அமைக்க முடியும்.

எனவே அவ்வாறு நல்ல சூழல் இருக்கின்ற போது அதனை விடுத்து பிரிந்து நின்று கேட்டு வாக்கை சிதறடிப்பதானது அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கும் நாட்டிற்கும் செய்யும் அநியாயமாகும்.

இந்நிலையில் நாட்டிற்கு நல்லாட்சியை தரக்கூடிய வகையில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய நிலையை உருவாக்குவதற்காக நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவரான ரணிலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்திற்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

4 comments:

  1. நாட்டுக்கு நல்லாட்சியை வழங்குவதற்கு இவர்களை ஒற்றுமைப்படுத்த அழைப்பு கொடுத்துள்ளார். மைத்திரியாரையும் சேர்க்கவும்.
    நல்ல ஆட்சி நடக்.....,கும்.
    மக்கள்் கொரணா அச்சத்தால் செத்து மடியிதுகள். இவர் அரசியல் பேசுகிறார். Swiss bank balance ஐ சற்று தூக்கி விடவேண்டியுள்ளதோ?

    ReplyDelete
  2. இதுவும் ஒரு டீல் நடக்கும்.

    ReplyDelete
  3. People are running in fear of Corona.
    He talks about polititics. Shame on you Mr.Rishad. Behave like a gentleman!

    ReplyDelete

Powered by Blogger.