Header Ads



டெல்லி கலவரத்தில் அடையாளச் சின்னம், முகமது ஜுபைரின் வாக்குமூலம்

பிப்ரவரி 24 அன்று டெல்லி கலவரத்தில் முகமது ஜுபைர் தாக்கப்பட்ட படம் இந்தக் கலவரத்தின் அடையாளச் சின்னம் ஆகியுள்ளது.
37 வயதாகும் இவர் டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முகமாகியுள்ளார். காயமில்லாத பாகம் என்று அவரது உடலில் எதுவும் இல்லை.
இப்போதுவரை அவரால் ஒரு முதல் தகவல் அறிக்கை பதியவைக்க முடியவில்லை.
அவரது தலையில் 25 -30 தையல்கள் உள்ளன. அவர் மருத்துவமனையில் அருகில் இருந்தவர்களிடம் அலைபேசி எண்ணை கொடுத்த பின், தாக்கப்பட்ட நான்கு நாட்கள் கழித்தே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் பார்த்தனர்.
சரி. முகமது ஜுபைர் என்ன சொல்கிறார் என்பது கீழே.
அந்த வன்முறை கும்பலில் ஆயிரக் கணக்கானோர் இருந்தனர்.
ஆனால் என்னை அடித்தவர்கள் சிலரே. 20-25 பேர் இருப்பார்கள். அவர்களால் எந்த அளவு என்னை அடிக்க முடியுமோ அந்த அளவு அடித்தனர். அவர்கள் இரும்பு கம்பி, தடி ஆகியவற்றைக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக என்னை தாக்கினர்.
அன்று காலை நான் மசூதிக்கு சென்றேன். அங்கிருந்து வரும்போது எதாவது வாங்கி வருவது என் வழக்கம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் எதாவது வாங்க வேண்டும் என்று சில தின்பண்டங்களை வாங்கினேன். அங்கே கலவரம் நடந்து கொண்டிருந்தது.
பஜன்புராவில் உள்ள சுரங்கப்பாதை மூலம் சாந்த் பாக் செல்ல நினைத்தேன். நான் குர்தா - பைஜாமா அணிந்திருந்தேன்.
அங்கு கலவரத்தை பார்த்த நான் அங்கே இருந்த ஓர் இடத்தில் ஒளிந்து கொண்டேன்.
இரண்டு தரப்பிலும் கலவரத்தில் ஈடுபட்டு கொண்டு கல் வீசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தை விட்டு சென்று விடலாம் என்று இருந்தபோது அவர்கள் என்னை பார்த்து விட்டனர்.
அவர்கள் வேட்டைக்கு நான் கிடைத்ததுபோல் ஆனது. முதலில் ஓர் இரும்பு கம்பியை வைத்து தலையில் அடித்தனர். பின்பு அடுத்த இரும்பு கம்பி என் தலையில் விழுந்தது. பிறகு நான் முட்டிபோட்டு உட்கார்ந்து கொண்டேன்.
பிறகு ரத்தம் வர வர எனக்கு மயக்கம் வந்துவிட்டது. அடிக்க வந்தவர்களில் ஒருவர் வாள் வைத்திருந்தார். அவர் அந்த வாளால் தலையில் பக்கவாட்டில் என்னை தாக்கினார். அதன் பின் "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷம் போட்டு கொண்டு இந்த முஸ்லிமை கொல்லுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள்.
நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது என நினைத்தேன்.
அதன் பின் எனக்கு என்னை ஆம்புலன்சில் யாரோ தூக்கி சென்றது போல் இருந்தது.
மருத்துவமனையில் பார்த்தால் என் பக்கத்தில் யாரும் இல்லை. மருத்துவரிடம் எனக்கு ஸ்கேன் எடுக்க சொன்னேன். ஆனால் என் பக்கத்தில் இரண்டு கைகளிலும் வெட்டுபட்டு ஒருவர் இருந்தார். அவருக்கு என்னைவிட மருத்துவரின் கவனிப்பு அதிகம் தேவை என்பதை உணர்ந்தேன்.
போலீஸார் கலவரம் நடந்த இடத்தில் அவர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாததுபோல் சென்று கொண்டிருந்தார்கள்.
என்னை அந்த புகைப்படத்தில் பார்த்தவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்றுதான் நினைத்திருப்பார்கள்.
எனக்கு பயமாக இருந்ததா என நிறைய பேர் என்னிடம் கேட்டனர். ஆனால் நான் தாக்கப்பட்டபோது கூட பயமாக இல்லை. தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும்.
சிலர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்னை அடித்தார்கள் என என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இவ்வாறு செய்பவர்கள் ஓர் இந்துவாகவும் இருக்க முடியாது, ஒரு முஸ்லிமாகவும் இருக்க முடியாது.

1 comment:

Powered by Blogger.