Header Ads



ஆபத்தில் உதவிய தர்மம் = அம்பாறையில் கதையல்ல நிஜம்


ஊரே அடங்கியே வேளை, அன்று அழகிய மாலைப்பொழுது,

அத்தியவசிய சேவைகள் மட்டும் இயங்கிய நிலையில் தேநீர் அருந்தி விட்டு தென்கிழக்கை நோக்கி நகர்கிறது எமது பயணம். வீதிகள் வழமையை விட வித்தியாசமான சூழலில் மெளனமாய் உள்ளது.

அது எமக்கான பயணம் அல்ல

அடுத்தவரில் நலனுக்காக  நண்பர்கள் மூலம் ஒருவருக்கு உதவுவதற்காய் எமது பயணம் ஆரம்பமானது.

கடலுக்கும் வயலுக்கு மத்தியில் அழகிய கிரமாமத்தில் ஓர் குடும்பம் சொல்ல முடியாத துயரங்களுக்கு மத்தியில் அன்றாடம் மிகவும் கஸ்டமான சூழ் நிலையில் தனது வாழ்கையை மேற்கொள்கின்றார். 

நாங்களும் கொடுத்த வேலையை முடித்துக் கொண்டு ஊருக்கு செல்ல புறப்பட்டோம் .

வயல்களுக்கு நெல் விதைப்பு ஆரம்பமாகும் காலமீது..களியோடை பாலத்தை நெருங்கும் போது வீதியேங்கும் இருள் சூழ்ந்த நிலையால் எவ்வித வாகானமும் பாதையில் பயணிக்கவில்லை. எங்களுக்கு முன்னாள் 50m தூரத்தில் உயரமான ஏதோ ஒன்று காட்சியளித்தது. பின்னர் சற்றே நின்று பயணித்த மோட்டார் வாகனத்தை நிறுத்தினோம்.

அது யானைகள் கூட்டம்..

பெரிய யானையொன்று அதனை பின் தொடர்ந்து 02 யானைகள் வீதியினுடாக பாதையை கடந்து தென்கிழக்கு பக்கம் சென்றது. சற்று முன்னோக்கி நாங்கள் பயணித்து இருப்போமையானால் யானையில் மோதி இருப்போம . அல்லாஹ்வின் அருளால் நாம் நிதானித்து செயல்பட்டோம்.. நாங்கள் சென்ற செயல் நல் காரியம் என்பதால்  இறைவன் எங்களை பாதுகாத்தான். 

படிப்பினை-
எப்போதோ செய்த தர்மங்களும் நற்காரியங்களும் எமக்கு  வர இருக்கும் ஆபத்துகளை தடுத்திடும்.

1 comment:

  1. தர்மம் தலை கக்கும்

    ReplyDelete

Powered by Blogger.