Header Ads



ஞானசாரருக்கு ஏமாற்றம் - முதன்மை வேட்பாளரான மனு நிராகரிப்பு


- இக்பால் அலி -

குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட  25 வேட்பு மனுக்களில் அங்கீகரிக்கப்பட்ட  ஒரு கட்சியும் இரு சுயெச்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி ஆர் எம். ஆர். ரத்நாயக தெரிவித்தார். 

பொதுபல சேனவின் ஞானசார தேரர் முதன்மை வேட்பாளராகக் கொண்ட அபே ஜன பலய  என்ற ஒரு கட்சியுடன் இரு சுயெச்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன, ஐக்கிய மக்கள், சக்தி, ஐக்கிய  தேசிய கட்சி. தேசிய மக்கள் சக்தி,  ஸ்ரீலங்கா சமாஜவாதி, சனசத பெரமுன, லிபரல் கட்சி, பெரட்டுகாமி சாமஜவாதி, இலங்கை கம்கரு கட்சி உள்ளிட்ட 12 கட்சிகளுடன் 10 சுயெச்சைக் குழுக்களும் இம்முறை களமிறங்குகின்றனர். 

இம்மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முதன்மை வேட்பாளராக இந்நாட்டுப் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜக்ஷ  இரண்டாவது தடவையாகவும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அனுர பிரியர்சன யாப்பா, அகிலவிராஜ்  காரிவசம், அசோக அபேசிங்க ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் சமூகளித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.