Header Ads



சீனாவை மீண்டும் மிகப்பெரிய அளவில் கொரோனா தாக்கலாம் -: வைரஸ் நிபுணர் எச்சரிக்கை!


வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் மிகப்பெரிய அளவில் கொரோனா வெடிப்பு ஏற்படலாம் என சீனாவின் மூத்த கொரோனா வைரஸ் நிபுணர்களில் ஒருவர்எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்த பெய்ஜிங்கின் நிபுணர் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் லி லான்ஜுவான் (73), வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நம் நாட்டில் மற்றொரு பெரிய அளவிலான தொற்றுநோயைத் தூண்டக்கூடும் என்று அவர் மிகவும் கவலைப்படுவதாக கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஷென்ஜென் மற்றும் ஹாங்க்சோ போன்ற நகரங்கள் அடிக்கடி சர்வதேச தகவல்தொடர்புகளைக் கொண்டுள்ளன.

இதனால் நம் நாட்டில் மற்றொரு பெரிய அளவிலான தொற்றுநோயைத் தூண்டக்கூடும் என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன் என பேசியுள்ளார்.

COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒருவர், வெளிநாட்டிலிருந்து திரும்பிய நபரிடம் தொடர்பு கொண்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அவரது கருத்து வந்துள்ளது.

அதேபோல கொரோனா வைரஸ் துவங்கியதாக நம்பப்படும் வுஹான் நகரானது, 2 மாதங்களுக்கு பின் தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.