Header Ads



ஆழ்கடலுக்கு படகுகள் செல்வதற்கு அனுமதி


- எஸ்.எம்.எம்.முர்ஷித் - 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊடரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் ஆலோசனையின் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரின் வழிகாட்டலில் கல்குடா பிரதேசத்தில் ஆழ்கடலுக்கு படகுகள் செல்வதற்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊடரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீனவர்கள் சங்கங்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப் படகுகள் செல்ல பரணிப்புரை வழங்கப்பட்டது.

அந்தவகையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கல்குடாப் பிரதேசத்திலுள்ள மீனவர்களின் 320 படகுகளும், கல்முனைப் பிரதேசத்தில் இருந்து 80 படகுகளுமாக 400 படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளது.

இந்தவகையில் மீன்பிடித் துறைமுக திணைக்களம் மற்றும் கரையோர காவல் படை ஆகியோரின் அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்ட படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீனவர்களின் கஷ்ட நிலைமையை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதியின் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் ஆகியோருக்கு மீனவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.


No comments

Powered by Blogger.