Header Ads



கொரோனா வைரஸ் நாடு, முழுவதும் பரவும் ஆபத்து - ரணில்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் இதுவரை எந்த கூட்டுத்திட்டங்களும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நெருக்கடியான நிலைமை தொடர்பில் தீர்வை காண உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கம் அதற்கு பதிலளிக்கவில்லை.

எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் வரை எந்த பணத்தையும் அரசாங்கம் செலவிட முடியாது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது முதல் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சுகாதார சேவைகளை நடத்துவதும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

நெருக்கடியை நன்கு உணர்ந்துக்கொண்டுள்ளதன் காரணமாகவே உடன்டியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தோம்.

ஒரு வாரம் கடந்தும் அரசாங்கம் இதற்கு பதிலளிக்கவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்பட்டால் நெருக்கடியை வெற்றி கொள்ள முடியாது.

நாட்டை பாதுகாப்பதற்கான முன்னுரிமையை வழங்குவதன் மூலமே அந்த நெருக்கடியில் இருந்து வெற்றி பெற முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. බබෝ දැන් ද නැගිට්ටුනෙ?

    ReplyDelete
  2. If you and your wobbly government was there, the situation would have been much worse today.
    God is great. He kicked all of you out before the worse came.

    ReplyDelete

Powered by Blogger.