Header Ads



கொரோனாவால் வேலையிழந்தவர்களுக்கு சாப்பாடு இலவசம் - பாகிஸ்தான் நடுவரின் நெகிழ்ச்சி உதவி


சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் டார், கொரோனா நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, பாகிஸ்தானிலும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஏராளமானோர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அப்படி வேலை இழந்தவர்களுக்கு எனது Restaurant-ல் இலவசமாக உணவு வழங்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அலீம் டார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலீம் டார் கூறுகையில் உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பாகிஸ்தானிலும் பரவத் தொடங்கியுள்ளது. எனினும், நம்முடைய ஆதரவு இல்லாமல் அரசாங்கத்தால் ஏதும் செய்ய இயலாது. அனைத்து மக்களும் அரசு வலியுறுத்தியுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடு முடக்கப்படும்போது மக்கள் வேலையில்லாமல் இருப்பார்கள். என்னுடைய சொந்த Restaurant ஒன்று Dar’s Delighto என்ற பெயரில் லாகூரில் உள்ள பியா சாலையில் இயங்கி வருகிறது. தற்போது வேலையில்லாமல் இருப்பவர்கள். அங்கு சென்று பணம் ஏதுமின்றி இலவசமாக சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.