Header Ads



மக்கா, மதீனாவிற்குச் செல்லும் நுழைவு வாயில்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன

இந்த ஏற்பாடு ஷரீயத்சட்டப்படி சரியான நடவடிக்கை என இரண்டு ஹரம்களின் விவகாரங்களக் கவனிக்கும் நிர்வாகத் தலைவர் ஷைக் சுதைஸ் அறிவித்துள்ளார்.

அவர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இதுதான்.

3473. ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது.... (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று கூறினார்கள்' என்று பதிலளித்தார்கள்.

----புகாரி
அபுந் நஸ்ர்(ரஹ்) கூறினார்:

அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது.
(வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.)

3474. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள்.
Book :60 புகாரி

Kaniyur Ismail Najee Manbayee

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல முடிவு.அதுவும் சட்டத்துக்கு உற்பட்ட காலத்துக்குப் பொருத்தமான தீர்மானம்.அதுபோல, அரசாங்கத்தின் எல்லா விடயங்களிலும் இதே அமைப்பைப் பின்பற்றினால் உலக மக்கள் அனைவரும் ஒரே தீர்மானமாக இஸ்லாத்தைப் பின்பற்றுவார்கள். அப்படியான ஒரு நிலைமை சவூதியில் வருமா?

    ReplyDelete

Powered by Blogger.