Header Ads



சீன ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு, அதில் எவரும் முட்டையிட அனுமதிக்க மாட்டேன்

பொலன்நறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை, சீன ஜனாதிபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பரிசு எனவும் அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவை வெலிகந்தை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சீன ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு சிறுநீரக வைத்தியசாலை. அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக கேள்விப் பட்டேன். சிறுநீரக வைத்தியசாலை நான் கொண்டு வந்தது. நான் நிர்மாணித்தது. எனக்கு கிடைத்த பரிசு. அதில் எவரும் முட்டையிட அனுமதிக்க மாட்டேன்.

நானே அந்த வைத்தியசாலையின் பணிகளை மேற்கொள்வேன். முட்டையிட முடியாதவர்கள் வேறு நபர்கள் கட்டிய கூட்டில் முட்டையிட சில முயற்சித்து வருகின்றனர். அது வேறு கதை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. திரு மைத்திரிபால சிரிசேன அவர்களே!, நீங்கள் சாதாரண ஒரு மனிதனாக அல்லது இலங்கைப் பிரஜையாக வீட்டில் படுத்துக் கிடந்தபோது சீன ஜனாதிபதி உங்கள் வீட்டுக்கு வந்து தட்டி எழுப்பி உங்கள் பொலன்னருவ கிராமத்துக்கு சிறு நீரக வைத்தியசாலையைப் பரிசாகத் தருகிறேன் என உங்களுக்கு பரிசு தந்து விட்டுச் சென்றாரா அல்லது இந்த நாட்டில் வாழும் நான் உற்பட 60 இலட்சம் மக்கள் உங்களை நம்பி நீங்கள் நாட்டுக்கு மிகவும் பொறுத்தமான சனாதிபதி என மண்குதிரையை நம்பியது போல் அறுபது இலட்சம் இலங்கையர்களும் உங்களுக்கு வாக்களித்து சனாதிபதியாகத் தெரிவு செய்தது பொலன்னருவையை இலங்கையாகக் காட்டி உலக நாடுகளை ஏமாற்றி பிச்சை வாங்கி உங்கள் குடும்பத்தின் வயிறு நிரப்புவதற்கு அல்ல.எங்கள் அறுபது இலட்சத்துடன் இந்த நாட்டில் வாழும் 1 1/2 கோடி மக்களுக்கும் தான் நீங்கள் சனாதிபதியாக இருந்தீர்கள். பதவிக்கு உரிய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து இந்த நாட்டுக்கு பாவம் எனக்கூறி சீனநாட்டு அரசாங்கம் அன்பளிப்பு செய்த வைத்தியசாலை இந்த நாட்டுக்கு உரியது.அதற்கு தேவையான வைத்தியர்கள்,தாதிகள், உத்தியோகஸ்தர்கள் உற்பட அனைத்து சேவையாளர்களும் இந்த நாட்டின் பொது நிர்வாக உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானியில் வெற்றிடங்களை பிரசுரித்து விண்ணப்பங்கள் கோரி,தகுதியானவர்களை அந்த அமைச்சு அல்லது அரசாங்கம் தீர்மானிக்கும் அமைச்சு நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். பதவியையும் அதன் அதிகாரங்களையும் துஷ்பிரயோகம் செய்து களவாடி, பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாடியது மட்டுமன்றி நாட்டின் பொது நிறுவனங்களையும் பதவி இல்லாத போதும் ஆக்கிரமிக்க திட்டம் போடுவது பேராசையின் உச்சக்கட்டமாகும். இதற்கு ஒரே வழி ஏற்கனவே ஏப்ரல் 21 அன்று அநியாயமாகப்படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களாவது இந்த நபருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இவரை உடனடியாக 150 வருடங்கள் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த நபர் இந்த நாட்டின் புற்றுநோயாகவே தொடர்ந்தும் செயல்படுவார்.

    ReplyDelete
  2. Professional Translation Services Well Said

    ReplyDelete

Powered by Blogger.