Header Ads



நாட்டில் முக கவசங்களுக்கு தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பனை

நாட்டின் மருந்தகங்களில் முக கவசங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் லலித் ஜெயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்

பயன்பாட்டின் பின்னர் எளிதில் களைந்துவிடக்கூடிய முகக் கவசங்களும் அவற்றின் மூலப்பொருட்களும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

எனினும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமையால் அவை முடங்கிப்போயுள்ளன. அத்துடன் சீனாவிலும் எளிதில் களைந்துவிடக்கூடிய முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் பிரதான தளங்கள் கொரோனா வைரஸ் தொற்று முதலில் ஏற்பட்ட ஹூபாய் மாகாணத்திலேயே அமைந்துள்ளன.

இந்தநிலையில் கேள்விக்கு ஏற்ப முகக்கவசங்களை நிரம்பல் செய்யமுடியாமல் இருப்பதாக அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வேறு நாடுகளில் இருந்து முகக்கவசங்களை விநியோகம்செய்யவேண்டியுள்ளமையால் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்யவேண்டியுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை களையக்கூடிய முகக்கவசங்களின் இலங்கை விநியோகஸ்தர் ஒருவர் அதிக விலைக்கு சீனாவுக்கு முகக்கவசங்களை அனுப்பவுள்ளார் என்று தகவலும் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.