Header Ads



மக்கள் அஜாக்கிரதையாக உள்ளனர் - மஹேல ஜெயவர்த்தனே வேதனை

இலங்கையில் இருக்கும் மக்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தை புரிந்து கொள்ளாமல் முன்னெச்சரிக்கையாக இல்லாமல், இருக்கின்றனர் என்பதை உணர்த்தும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே புகைப்படம் ஒன்றை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இலங்கையில் மட்டும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையை கையாள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த நோய் வேகமாக பரவுவதால், மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக அங்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்கள் எந்த ஒரு பாதுகாப்பு கவசம் இன்றி, அதாவது முகமூடி அணியாமல், சற்று இடைவெளி கூட விடாமல் இருக்கின்றனர். இதனால் மஹேல ஜெயவர்த்தனே, இதை நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு கீழே இணையவாசிகள் சிலர் மக்களுக்கு இன்னும் அதன் தாக்கம் புரியவில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

1 comment:

  1. உண்மையில் கவலைப் படவேண்டிய விடயம் தான். பரவல் கட்டுக்கடங்காமல் போகும்போது வைத்தியர்கள் உபகரணங்கள் போதாமல்போகும் போது இத்தாலியைப்போன்று ஒரு தொகுதியினரை இறக்க விடவேண்டி வரலாம். தெருவுக்குத் தெருவு ஊரடங்குபோட்டுக் கட்டுப்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.