Header Ads



முஸ்லிம்களுக்கு ராஜபக்ஷ குடும்பம், என்ன அநியாயம் செய்தது..? பசில் உருக்கம்

முஸ்லிம்களுக்கு ராஜபக்ஷ குடும்பம், என்ன அநியாயம் செய்தது  என,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் 2 பேரை சந்தித்த பசில் ராஜபக்ஷ, உங்கள் ஏரியாக்களில், உங்களினால் எத்தனை விருப்பு வாக்குகளை பெற முடியுமென கேட்டுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய முஸ்லிம் அரசயல்வாதிகள்,

தங்களினால்  தலா 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற முடியுமென குறிப்பட்டுள்ளனர்.

இதற்கு பதில் வழங்கிய பசில் ராஜபக்ஷ நீங்கள் மொட்டுவில் தேர்தல் கேட்டால்  உங்களுக்கு 5 ஆயிரம் வாக்குகளும் கிடைக்காது என தெரிவித்து அவர்களை சுயேற்சைகயாக போட்டியிட வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தங்களது ராஜபக்ஷ குடும்பம், முஸ்லிம்களுக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை எனவும் , முஸ்லிம் அரசியல்வாதிகள் மொட்டு அணியில் இணைத்து போட்டியிடச் செய்வது  வாக்குகளை குறைக்கும் எனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டி உள்ளார்.

4 comments:

  1. தர்கா டவுன்,பேருவலை,அழுத்கம, திகன, மினுவாங்கொட,குருநாகலின் பல உள்கிராமங்களில் வாழும் முஸ்லிம்களிடம் கேட்டால் ராஜபக்‌ஷ குடும்பம் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு என்ன செய்தது என்பதை விபரமாகத் தெரிந்து கொள்ளலாம். அதே நேரம் ஸஹ்ரானும் அவனைச் சார்ந்த கொலைகாரர்களையும் யார் வாடகைக்கு அமர்த்தி, அவர்களுடைய உள்ளக திட்டங்களை வெற்றிகரமாக முடித்து அதன் பலியை இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் தலையில் போட்டு அவர்களைச் சீரழித்து, பயத்திலும் எந்த நேரம் குழப்பம் வரும் என்ற பதட்டத்திலும் வாழவைத்த சூழ்ச்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் சரியான விசாரணைக்குழு நியமித்தால் சிலவேளை இந்த நாட்டு மக்கள் உண்மையைத் தெரிய வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  2. ஒரு அநியாமும் செய்ய வில்லை ஆனால் கூடா நட்பு விமல் கம்மன்வல மற்றும் இனவாதிகள்..

    ReplyDelete
  3. யூ.என்.பி செய்த அட்டூழியங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் தங்கம். முஸ்லிம் வாக்குகளை வாரிச் சுருட்டி எடுத்து விட்டு, பதுங்கிப் பதுங்கி அநியாயம் செய்வார்கள்.
    அதன் சாபம் தான் இன்று கட்சி உடைந்து சின்னாபின்னப்பட்டுள்ளது. ரனில் தற்போது சிங்கத்தின் வாலி்ல் கட்டப்பட்ட நரி போல மாட்டிக் கொண்டார்.

    ReplyDelete
  4. தயவுசெய்து உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். தம்பி நீங்கள் மேலே சொன்னவாறு அலுத்கம விடயத்தில் ராஜபக்சே குடும்பம் ஈடுபட்டு இருக்குமானால் ஏன் இந்த நல்லாட்சி வந்து ஐந்து வருடங்கள் ஆட்சி புரிந்தும் அந்த அலுத்கம சம்பவம் தொடர்பாக இன்று நல்லாட்சி என்று சொல்லப்பட்ட பொள்ளாட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.....
    மேலும் அந்த அநியாயமான நல்லாட்சிக்கு பின்னால் வக்காலத்து வாங்கிக்கொண்டு திரிந்த முஸ்லிம் கட்சிகள் இந்த அலுத்கம சம்பந்தமாக எந்த ஒரு தீர்மானமும் அல்லது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று இந்த நல்லாட்சியை கேட்டுக் கொள்ளவில்லை.....

    ReplyDelete

Powered by Blogger.