Header Ads



இனவாதத் தீப்பொறி,, கொரோணாவையும் விட்டு வைக்கவில்லை...

கொரோணாவை வைத்து மூட்டப்பட்டு வரும் இனவாத் தீயானது கொரோணாவை விட பாரிய ஆபத்தில் போய் முடியலாம் போல் தெரிகின்றது. தடுத்து நிறுத்துவதில் உடனடிக்  கவனம் செலுத்துவது சமூகத் தலைமைகளின் பாரிய  பொறுப்பாகும்.* 

பெரும்பான்மை சமூகத்தின்  மிகவும் பிரபல்யமான இனவாத மீடியாக்கள் சிலவும் மற்றும் பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமுள்ள  பல்வேறு சமூக வலைத்தளங்களும் கொரோனாவை வைத்து மிகப் பாரிய அளவிலான இனவாதத்தையும் இஸ்லாம் பற்றிய வெறுப்புப் பதிவுகளையும் நன்றாகத் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. 

உயிருக்கு ஆபத்தான இக் கொடிய நோயை வைத்து  சில அமைப்புக்களும், ஊடகங்களும் இனவாத நெருப்பை மூட்டத் துடிப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க ஈனச்செயலாகும். பொறுப்புவாய்ந்த பதவிகளில் உள்ள சில அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க விடையமாகும். 

ஊரடங்குச் சட்டத்தை மதிக்காதிருந்ததிலும், தனிமைப்படுத்திக் கொள்வதில்  அசட்டைத்தனம் செய்ததிலும் முஸ்லிங்கள் மாத்திரமே தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது போன்றதொரு பிம்பம் மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

குறித்த இனவாதக் காய் நகர்த்தல்களை   அவதானிக்கின்ற போது "இலங்கையில் குறித்த நோய்ப் பரவல் உண்டானதற்கு  இலங்கை முஸ்லிங்களே காரணமாக இருந்தனர்”  என்ற  குற்றச்சாட்டு  முன்வைக்கப்படாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை . 

நேற்று வரை நோய்பரவலால் 110 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள், பெயர், முகவரி என எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்பட வில்லை. எனினும் அக்குறனையில் நேற்று (28/03/2020 சனிக்கிழமை) ஒரு நோயாளி இனம் காணப்பட்டுள்ளதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட இனவாதமானது குறித்த நோய்த்தொற்றாளரின்  பெயர், ஊர், தெரு, போட்டோ என அவரது தனிப்பட்ட அடையாளங்களுடன்  வேகமாகப்  பயணத்து வருகின்றது.  குறித்த நபருக்கு ஏற்பட்டுள்ள நோய்பரவலே  இன்று ஞாயிறு இலங்கையின் பிரதான பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது. வேறு சில முஸ்லிம் ஊர்களில்  இடம்பெற்ற சில செயற்பாடுகளும் முஸ்லிங்கள், இஸ்லாமியர்கள் போன்ற  தெளிவான அடையாளப்படுத்தல்களுடன்  காட்டுத்தீயாய் பரப்பட்டது. 

எனினும் கடந்த சில தினங்கள் முன்பு, ஊரடங்கு அமுலில் இருந்த வேலை   பல பெளத்த இளைஞர் யுவதிகள் ஒன்று சேர்ந்து ஆடிப்பாடி, மது அருந்தி, கசிப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தபோது கைது செய்யப்பட்டனர். அது போன்ற பல்வேறு குற்றச்செயல்கள்  பொளத்தர்கள் வாழும் பிரதேசங்களில் ஊரடங்கு அமுலில் இருந்த போது பதிவாகி இருந்தன. எனினும் எந்தவொரு ஊடகமும் அவ்வாறான குற்றச் செயல்களை மதத்தை, இனத்தை அடையாளப்படுத்தி செய்தியாக வெளியிடவில்லை. 

இனவாதத் தீயானது அதன் கொதிநிலையை அடைகின்ற போது  அது  நல்ல, தீய, சந்தோஷமான, கவலையான, ஆபத்தான சகல தருணங்களிலும் தனது நோக்கத்தை அடைந்து கொள்ள தருணம் பார்த்துக் கொண்டே இருக்கும் என்ற யதார்த்தம் எமது சமூகத்தால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை.

ஆகவே தான் இனவாதிகளுக்கு தீணி போடுவதில் எமது சமூகத்தைச் சார்ந்த பலரும் (தம்மை அறிந்தோ,  அறியாமலோ) பல்வேறு சந்தர்பங்களில் காரணமாக அமைந்து விடுகின்றனர். 

எமது சமூகத்தில் ஏதேனும் தவறுகள் இடம்பெறுக்கின்ற போது, தவறுகள் இடம்பெற்றுள்ளதாக யாரேனும் செய்திகளைப் பரப்பி விடுகின்ற போது நாமும் அவற்றை சமூக ஊடகங்களுக்கூடாக பரப்பி விடுவதை முற்றாகத் தவிர்ப்போம்.

அவ்வாறன செய்திளை வைத்து பல போது  இனவாதிகள் கதை கட்டுகின்றனர்,  சிறியவற்றை ஊதிப் பெரிதாக்கி இனவாதத்தை வளர்க்கின்றனர் என்பதை எமது சமூகம் இன்னும் உணர்ந்து கொள்வதாக இல்லை.

சமூக சீர் திருத்தங்களை விரும்புகின்றவர்கள் தவறுகளை சமூக ஊடகங்களில் ஏற்றி நாரடிக்கும் துரோகச் செயலைச் செய்யாது ஊர் தலைமைகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதே அறிவார்ந்த செயற்பாடாகும். அவ்வாறு செய்வதன் மூலம் மாத்திரமே தவறுகள் கலையப்படலாம். 

சமூக  வலைத்தளங்களில் அதிக நேரத்தை வீணடித்து வருபவர்களே பெரும்பாலும் புரளிகள் பரப்பப் படுவதற்கும் சமூகம் காட்டிக்  கொடுக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றனர். 

*உலகமே அச்சத்தில் உரைந்து போய் ஸ்தம்பிதமாகியுள்ள இத் தருணத்தில் அள்ளாஹ்வின் பால் அதிகம் திரும்புவோம். துஆ, இஸ்திஃபார், சதகா, குர்ஆன் திலாவத், நோன்பு நோற்றல் போன்ற நல்லமல்களிலும்  கற்றல், கற்பித்தல், வீட்டுத் தோட்டம் செய்தல் உள்ளிட்ட பயனுள்ள வகையிலும் எமது நேரங்களைக்  கழிக்க முயற்சிப்போம்.* 

இறுதியாக: 
கொரோனாவை வைத்து இனவாத விளையாட்டை நடாத்தி வரும் மீடியாக்கள், இனவாதக் குழுக்கள் பற்றிய தகவல்களை உரிய இடங்கள் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு  மிக அவசரமாகக் கொண்டு செல்வது முஸ்லிம் சமூக,  சமய, அரசியல் தலைமைகளின் தலையாயக் கடமையாகும். 

 ஷfபீக் ஸுபைர்.

4 comments:

  1. These article should be forwarded to politicians, lawyers and government authority to take against the racist medias..

    If left this way.. no use

    ReplyDelete
  2. concernt and related people should complain to high authority and even should file cases against to such media to stop their dirty mouth.

    ReplyDelete
  3. USE FULL ARTICLE, ALLAH IS A GREAT PLANNER, DONT FAIL TO MAKE DUA, DUA IS A MOST POWERFUL WEAPON FOR ALL VIRUS AND ENEMY

    ReplyDelete
  4. Self isolation will be difficult in Colombo

    ReplyDelete

Powered by Blogger.