March 29, 2020

'கொரோனாவை இலங்கையில் பரப்புவது முஸ்லிம்கள்' என்ற நிலையை உருவாக்க இனவாத சக்திகள் சதி


கொரோனாவை இலங்கையில் பரப்புவது முஸ்லிம்கள்  என்ற நிலையை உருவாக்க சில இனவாத ஊடகங்களும், சிங்கள சமூக வளைத்தளப் பக்கங்களும் கடும் பிரயத்தனம் எடுப்பதை அவதானிக்க முடிகிறது.

அதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிலரும், மிகச் சரியாக பொய்ன்ஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் செய்யும் தவறுகளை சரிப்படுத்தவோ, எல்லோரும் முந்திக் கொடுக்க செய்திகளைப் பகிரவும், கருத்து சொல்லவும் கிளம்பிவிடாதீர்கள்.

கொரோனா பயங்கரம் ஒரு புறம் இருக்க, முஸ்லிம் சமூகம் வேறுவிதமான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி  வரும் போல் தெரிகிறது.

corona virus (covid-19) யின் தாக்கத்தை   இன்னும் புரியாத சமூகம்...???

பரவி வரும் பேராபத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்.

எங்கு, எவரிடம் வைரஸ் இருக்கிறதென்பதை எவரும் உடனடியாக அறிந்திடவே முடியாது!

உங்களால் மற்றவர்களுக்கு நலவு எதுவும் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மற்றவர்களுக்கு உங்களால் கெடுதி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தொற்று பரவி விட்டால் அதனால் உங்கள் முழு குடும்பமுமே தனிமை படுத்தப்பட வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக்கி விடும்.

எனவே வீணாக வெளியில் அலைவதை விட்டும், கூட்டாக அமர்வதை விட்டும் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

உலகமே கதிகலங்க நாம் மட்டும் அலட்சியம் செய்ய முடியாது..!!!
Tomorrow may be too late...😷😥

#Stay_home 
#Stay_safe 
#Covid19 🇱🇰
வீடுகளில் அமைதியாக இருங்கள்...

Raji

4 கருத்துரைகள்:

இனவாதிகலின் வாய்க்கு வார்த்தைகளை கொடுக்காமல் எமது சமூகம் இனி வரும் நாட்களில் கவனமாக இருக்க வேண்டும்.ஹொரபொத்தானையில்,பேருவளையில் இடம் பெற்ர சம்பவங்கள் போல் இனியும் இடம் பெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

we should not give them any opportunity to make such a claim.. We should be example in following government instruction..otherwise, they will use this to blame entire Muslim community

News is released that main suspect of April 21st attack has been arrested today. Including other incidents, with this news, I think that foundation has been made for the election propaganda. I suspect some agents are working within our society to provoke the situation.

WHO HAS INFORMED THIS NEWS TO www.jaffnamuslim.com?
IF IT IS TRUE, THEN IT IS A GRAVE SITUATION EXPECTED.
BUT "THE MUSLIM VOICE" IS SURE THAT www.jaffnamuslim.com WILL VERIFY THE SOURCE AND CONFIRM FURTHER THIS NEWS, Insha Allah. THERE CAN BE DISTURBING ELEMENTS IN THE MAJORITY COMMUNITY, THE TAMIL COMMUNITY AND WITHIN OUR SELVES WHO MAY BE ATTEMPTING TO SPEAD THIS DANGEROUS NEWS TO MAKE THE MUSLIMS BE PENALIZED AS A COMMUNITY. Certain social mishaps created by the Muslim community in various parts of the country in violating the Health Regulations of the government to control the speading of the "COVID19" virus, especially with the knowing of the ULEMA is "OUTRAGEOUS" and thus the authorities have taken very strick action against the violators. In Hatton, A pastor and those followers suspected of infectious had been "QUARANTINED" in the Church itself, but this did not take place in Horawapathana of Atulugama or Beruwela. THE MUSLIMS HAVE TO BE VIGILANT PLEASE, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a Comment