Header Ads



தனியாக வெற்றியீட்டி வாருங்கள், அமைச்சுப்பதவியே தருவோம் - முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பசில்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பது, பொதுஜன பெரமுனவின் ஒட்டுமொத்த வாக்கு விகிதாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமென, அக்கட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் பசில் ராஜபக்ஸ கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்ந வகையில் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளான ஹிஸ்புல்லா மற்றும் அதாவுல்லா ஆகியோரிடம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்தோ அல்லது கூட்டாக போட்டியிட்டு, வெற்றியீட்டி அதன்பின் தம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறு, பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

குறிப்பாக வடக்குகிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்முடன் சேர்ந்து அதாவது மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால், அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கும் வாக்குகள்கூட கிடைக்காது எனவும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. ஹிஸ்புல்லாவுக்கு இடம் கொடுத்தால் மொட்டு கட்சிக்குறிய பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் குறைந்துவிடும் என்ற பயத்தால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது இதை ஹிஸ்புல்லா விளங்கிகொள்வாரா

    அவ்வாறே தமது கட்சிக்கு பழைய முஸ்லிம் அரசியவாதிகளை சேர்த்து கொள்வதில்லை என்ற கொள்கையின் வெளிப்பாடுமாகும்

    ReplyDelete

Powered by Blogger.