Header Ads



ஹக்கீம் – ஹசனலி சந்திப்பு, கட்சியில் இணைய அழைப்பு, யாப்பைத் திருத்தவும் இணக்கம்

– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை 4 இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரசிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது மு.காங்கிரஸின் முன்னாள் செயலாளரான ஹசனலியை மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்காக மு.காங்கிரஸின் யாப்பில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குத் தான் தயாராக உள்ளதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஹசனலி, தான் தற்போது செயலாளராகப் பதவி வகிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில் மு.கா.வுடன் பேசுவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை இதன்போது ஹசனலி வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனக்கும் விருப்பம் உள்ள போதும், அதனைச் செயற்படுத்துவதற்கு காலம் போதாது என்றும், இதனை யார் ஆரம்பிப்பது என்கிற பிரச்சினை உள்ளது என்றும் இதன்போது ஹக்கீம் கூறியுள்ளார்.

2 comments:

  1. யாப்பு திருத்தம் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்றால் அது உண்மை .இல்லாவிட்டால் இது ஏமாற்று வேலை .

    ReplyDelete
  2. சாணக்கியருக்கு பயம் தொடங்கிற்று.
    ஹஸன் அலிக்கு கொக்கி போடுறார்.
    பஸீர் என்ன செய்வார்?
    இந்த ஞானம் அப்போ பிரித்தாளும் போது ஏன் பிறக்க இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.